Breaking News

இந்தோனேசியாவில் சிக்கித்தவிக்கும் ஆசிரியர்களை மீட்க சிறப்பு விமானம் ஏற்பாடு : கொரோனா பரவல் பாதிப்புகளிலிருந்து சொந்த நாட்டினரை மீட்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம்

கோவிட் 19 பாதிப்புகள் மிக தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தோனேசியாவில் வசிக்கும் ஆஸ்திரேலியர்களை மீட்கும் நடவடிக்கையில் அந்நாடு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக சிறப்பு விமானம் ஒன்றின் மூலமாக நாடு திரும்பும் ஆஸ்திரேலியர்களை திரும்ப அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Special flight to rescue trapped teachers in Indonesia. Govt intensifies efforts to rescue natives of corona.Qantas நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்திரேலிய அரசு இந்தோனேசியாவில் உள்ள பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை கண்டறிந்து முதலில் அவர்களை வணிக விமானம் மூலமாக உடனடியாக நாட்டிற்கு அழைத்து வந்து அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்வதற்காக 800-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

இதனிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று பாதிப்பு காரணமாக 24 மணி நேரத்தில் 2609 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக இயக்கப்படும் சிறப்பு விமானங்களை தவிர மேலும் பல்வேறு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து இந்தோனேசியாவில் பாதிக்கப்படும் பட்டியலில் உள்ள நபர்களை தேர்வு செய்து வருகிறது. அதே நேரத்தில் அனைவரும் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களில் சிலருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் நிலைமை மோசமாகி வரும் நிலையில் மருத்துவமனைகளில் முழுவதும் நிரம்பி உள்ளன மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் ஜாவா மற்றும் பாலி தீவுகளில் ஏராளமானோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Special flight to rescue trapped teachers in Indonesia. Govt intensifies efforts to rescue natives of corona,இதனிடையே குறிப்பிட்ட தீவுகளில் உள்ள ஆஸ்திரேலியர்கள் 350க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் இருப்பதாகவும் அவர்களை முதலில் ஆஸ்திரேலியா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே இதுபோன்று வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் ஆஸ்திரேலியர்கள் உடனடியாக அந்நாட்டு தூதரங்ககளை தொடர்பு கொண்டு நாடு திரும்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டால் அரசு உதவுவதற்கு தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3idDR0o