Breaking News

ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான சிறப்பு தூதர் : தாலிபான்களின் கட்டுப்பாடுகளை தொடர்ந்து தூதரை நியமித்தது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் பிறந்தவரும் அமெரிக்காவில் படித்து அங்கேயே பணிபுரிந்து வந்தவருமான Rina Amiri, பராக் ஒபாமா ஆட்சி காலத்தில் அமெரிக்க அரசாங்கத்தில் பணியாற்றியவர் ஆவார். தற்போது அவரை ஆப்கானிஸ்தான் பெண்கள், சிறுமிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான சிறப்பு தூதராக அமெரிக்க அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

ஆப்காணிஸ்தானில் தாலிபான்களின் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் அங்கு பெண்கள் வெளியே வருவதற்கும் கல்வி நிலையங்களுக்குச் செல்வதற்கும் பெரும்பாலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏற்கனவே விசா பெற்றிருந்தவர்கள் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து வரும் நிலையில், இதுதொடர்பான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சிறப்புத் தூதுவராக Rina Amiri நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாகாணங்களுக்கான செயலாளர் Antony Blinken அறிவித்துள்ளார்.

Special envoy for women and human rights activists in Afghanistan. US appoints ambassador following Taliban restrictions.கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது துருப்புக்களை ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தி இருந்த அமெரிக்கா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவற்றை முழுவதுமாக திரும்ப பெற்றுக்கொண்டது. இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் அரசாங்கம் மூலமாக ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்கான சிறப்பு தூதர் தற்போது நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலமாக ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்படும் சிறுமிகள் பெண்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் மேற்கோள்ளப்படும் என்றும் Antony Blinken கூறியுள்ளார்.

அமைதியான, பாதுகாப்பான சூழலை ஆப்கானிஸ்தானில் உருவாக்கவே அமெரிக்கா விரும்புவதாகவும் அரசியல், சமூக பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டு அது மக்களின் அன்றாட வாழ்வில் பலன் தர வேண்டும் என்றும் Antony Blinken தெரிவித்துள்ளார்.

நீண்ட தூரம் பயணிக்கும் பெண்கள் ஆண் துணையோடு தான் செல்ல வேண்டும் என்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்களுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்துள்ளனர் 95 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இருந்ததைவிட தற்போது கடுமையான செயல்பாடுகளில் தாலிபான்கள் ஈடுபட்டு வருவதாகவும் இதன் மூலமாக பெண்களுக்கான சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஆப்கன் பெண்களுக்கான உரிமைகளை மீட்டுத் தரும் நடவடிக்கைகளிலும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அமெரிக்கா பல்வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ஜோ பைடன் அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Link Source: https://bit.ly/3EPsCTY