Breaking News

ரஷ்ய ராணுவம் விதித்த கெடு முடிவடைந்ததை அடுத்து அதுதொடர்பாக பேசிய உக்ரைன் துணை பிரதமர் இரினா, ரஷ்யாவிடம் சரணடைய வேண்டும் என்கிற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரம் மரியூபோல். இங்கு ரஷ்ய படைகள் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் பலர் பதுங்கியுள்ளனர். அவர்களை உக்ரைன் ராணுவம் பாதுகாத்து வருகிறது.

Speaking after the expiration of the deadline imposed by the Russian military, Ukraine Deputy Prime Minister Irina has categorically stated that there is no room for talk of surrendering to Russia..இந்நிலையில் மரியூபோலில் தாக்குதல்களை நடத்தி வரும் உக்ரைன் படைகள், கடந்த 21-ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்குள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என ரஷ்யா கெடு விதித்திருந்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் நாட்டு துறை பிரதமர் இரினா வெரேஷ்சுக், ஆயுதங்களுடன் சரணடைவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. இதை நாங்கள் ஏற்கனவே ரஷ்யப் படையினருக்கு கூறிவிட்டோம் என்று கூறியுள்ளார்.

ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட மரியுபோலின் ஒரு பகுதி முற்றிலும் சிதைந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை சர்வதேச ஊடகங்கள் பல வெளியிட்டுள்ளன. பல உடல்கள் போர்வைகளால் போர்த்தப்பட்ட நிலையில் சாலையோரம் கிடந்த புகைப்படங்களும் அடங்கும். தற்போது ரஷ்யா விடுத்த கெடுவை உக்ரைன் புறந்தள்ளியுள்ளதை அடுத்து, போரில் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை உலக நாடுகள் பல உற்றுநோக்கி வருகின்றனர்.

Link Source: https://bit.ly/3IxDojw