Breaking News

தெற்கு ஆஸ்திரேலிய எல்லை மூடல்.. பயணிகள் மெல்பர்னிலிந்து அடிலெய்ட்டுக்கு மாற்றம் !

South Australian border closed

தெற்கு ஆஸ்திரேலிய எல்லை நேற்றிரவு மூடப்பட்டதால், மெல்பர்னிலிருந்து செல்லும் பயணிகள் அடிலெய்ட் விமானநிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அடிலெய்ட் விமான நிலையத்திலிருந்து மாநிலத்திற்குள் நுழைய 4 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மெல்பர்னுக்கு விமானங்களை முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

South Australian border closed and Passengers turned around from Melbourne to Adelaideமெல்பர்னில் இருக்கும் Holiday Inn ஹோட்டலில் ஏற்பட்ட இரண்டு கொரோனா தொற்றால் Melbourneலிருந்து வருபவர்களை தடுக்கும் விதமாக தனது எல்லையை மூடுவதாக தெற்கு ஆஸ்திரேலிய நேற்று அறிவித்து. தெற்கு ஆஸ்திரேலியர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல் ஊழியர், ஹோட்டலை விட்டு வெளியேறிய ஒருவர் உள்பட இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. Holiday Inn தொற்றால் மொத்தம் 10 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Police Commissioner Grant Stevens கூறுகையில், எல்லை பகுதிகள் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது. Greater Melbourne -னிலிருந்து வந்தவர்களை கண்காணிக்கிறோம். எல்லை மூடுவதற்கு முன்பு எவரேனும் வந்திருந்தால், அவர்கள் மூலம் தொற்று பரவக்கூடும். எங்களுடைய SA Health experts ஹோட்டலில் தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை அணுக முயற்சி செய்து வருகின்றனர். எனவே தான் எல்லையை மூடியுள்ளோம். இதனால் விக்டோரியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.விக்டோரியாவிலும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

SA Chief Public Health officer Professor Nicola Spurrier கூறுகையில், இந்த வைரஸ் ஒரு மருத்துவ கருவியின் மூலம் Holiday Inn ஹோட்டலில் பரவியதாக நம்புகிறோம் என்றார்.Victoria’s Chief Health Officer Professor Brett Sutton கூறுகையில், nebuliser என்ற மருத்துவ கருவி மூலம் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர், உணவு மற்றும் குளிர்பான சேவை ஊழியர், மற்றும் அங்கு தங்கியருந்தவர் என மூன்று பேருக்கு இந்த தொற்றானது பரவியுள்ளது என்றார்.

வழக்கு ஒன்று: அங்கீகரிக்கப்பட்ட பெண் அலுவலருக்கு COVID-19 தொற்று உறுதியானதையடுத்து, அவரின் நெருங்கிய தொடர்புகள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வழக்கு இரண்டு: ஹோட்டல் தனிமைப்படுத்தலை விட்டு வெளியேறியவர், 16ஆம்நாள் முடிவில் தொற்று உறுதியானதையடுத்து தங்கள் வீட்டை விட்டு வெளியேற வில்லை. எனவே அவரது தொடர்புகள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறராக மட்டுமே இருப்பர் என்று திரு. ஆன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

வழக்கு மூன்று: உணவு மற்றும் பான உதவியாளருக்கு பிப்ரவரி 9ம் தேதி தொற்று உறுதியானது. அவர் தொற்று காலத்தில் சன்பரி பகுதியில் இருந்துள்ளார். எனவே விக்டோரியா மக்கள் அனைவரும், தொற்று ஏற்பட்டுள்ள இடத்திற்கு சென்றிருந்தாலோ அல்லது தொடர்பில் இருந்தாலோ தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.