Breaking News

முழுமையாக தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டும் எல்லையை திறக்கிறது தெற்கு ஆஸ்திரேலியா : விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், ACT மாகாணங்களில் இருந்து தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு வர அனுமதி

South Australia opens border only to those who have been fully vaccinated. Permission to enter South Australia from Victoria, New South Wales, ACT

தெற்கு ஆஸ்திரேலியா தனது உள்நாட்டு எல்லைகளில் விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள நிலையில் பல்வேறு மாகாணங்களில் இருந்தும் தெற்க ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு ஏராளமான பயணிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரம் தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு வரும் பயணிகள் 2 டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி இருக்க வேண்டும் என்றும், பரிசோதனைக்கான உரிய சான்றுகளை பயணத்தின்போது வைத்திருக்க வேண்டும் என்றும் தெற்கு ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

South Australia opens border only to those who have been fully vaccinated. Permission to enter South Australia from Victoria, New South Wales, ACT.இதனிடையே கடந்த பல மாதங்களாக சந்தித்துக் கொள்ளாத உறவுகள் மற்றும் நண்பர்கள் உள் நாட்டு எல்லை திறப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரது முகங்களில் மகிழ்ச்சியும் புன்னகையும் தவறு கூடிய காட்சிகள் அடிலெய்ட் விமான நிலையத்தில் அதிகம் காணக் கிடைக்கிறது. நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் சந்திக்கும் Adam Nelson, விமான நிலையத்திலேயே அவர்களை கட்டியணைத்து கண்ணீர் மல்க மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளிட்ட தொழில் நுட்பங்களில் தினமும் பேசிக்கொண்டிருந்தாலும் நேரில் சந்திப்பது போல
எதுவும் இல்லை என்று மெல்போர்னின் Monash மருத்துவமனையில் பணியாற்றும் Adam Nelson கூறியுள்ளார்.

இதேபோன்று எல்லைகள் திறக்கப்பட்டது அடுத்து எல்லை நகரங்களில் ஏராளமான வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன. 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் பார்டர் டவுன் பகுதியில் நிறுத்தப்பட்டு இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நெரிசலை குறைத்து வாகனங்கள் சுமூகமாக சென்று வரும் நிலையை ஏற்படுத்தி இருப்பதாகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பும் பயணிகள் மகிழ்ச்சியுடன் சென்று வருவதாகவும் காவல்துறை ஆணையர் Grant Stevens கூறியுள்ளார்.

South Australia opens border only to those who have been fully vaccinated. Permission to enter South Australia from Victoria, New South Wales, ACT..இறுதியாக இந்த சந்திப்பு நிகழ்ந்து விட்டது மூன்று மாத காலத்திற்கு மேல் தாய் தந்தை குழந்தைகளை பார்க்காமல் இருந்த இந்த கடுமையான சூழலில் இருந்து தாங்கள் வெளிவந்து விட்டோம் என்று உணர்ச்சி பொங்க பயணிகள் தெரிவித்து வருகிறார்கள். அடிலெய்ட் விமான நிலையத்தில் தொடர்ந்து தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் பார்ப்பதற்காக பலரும் அங்கு குவியும் நிலை ஏற்பட்டுள்ளது.

விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், ACT உள்ளிட்ட மாகாணங்களில் இருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கு தெற்கு ஆஸ்திரேலிய வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு முறையான பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் அங்கு பல்வேறு ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக ப்ரீமியர்
Steven Marshall தெரிவித்துள்ளார். ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்காக அனுமதி கேட்டு வந்துள்ள 43 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அதற்கு உரிய அனுமதி வழங்கப்படும் என்றும் ப்ரீமியர் கூறியுள்ளார்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் 80 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும், எல்லைகள் திறக்கப்பட்டு இருப்பதால் அது மேலும் வேகப்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும் என்றும் தலைமை சுகாதார அதிகாரி Nicola Spurrier தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3p0rkzw