Breaking News

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் தவணையை செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை : ரிசர்வ் வங்கி ஆளுநர், பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

இது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தொழில்கள் முடங்கி உள்ள சூழலில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள கடன்களுக்கான தவணை செலுத்த முடியாமல் தவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர்களுக்கு கடன் தவணைத் தொகையை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், கடனுக்கான வட்டியை வசூலிக்கக் கூடாது என்றும், இந்த ஆறு மாதகாலத்தில் வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்யக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு முன்னதாக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான 280 கோடி ரூபாய் மானியம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் அடிப்படையில் முதற்கட்டமாக நிதி உதவியை வழங்குவதற்கு 168 கோடியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

RBIஇதனிடையே தமிழகத்தில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான போதிய மருந்துகள் கையிருப்பு இல்லாத காரணத்தால் தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர் கோரும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் நேரடியாக டெண்டர் கோரப்பட்டு தடுப்பூசிகள் வாங்கி தமிழக மக்கள் அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளதால் உடனடியாக தடுப்பூசி போடும் நடவடிக்கைக்காக நேரடியாக டெண்டர் கோரும் முடிவை எடுத்துள்ள நிலையில் தற்போது தமிழக அரசின் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒருநாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது ஒரே நாளில் 30 ஆயிரத்து 355 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இரண்டு ஒரு வயது குழந்தைகள் உட்பட 293 பேர் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, 19 ஆயிரத்து 508 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Link Source: https://bit.ly/2SBKXBx