Breaking News

லித்தியம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கம் : மனிதர்களின் உணர்வு நிலையை மாற்றும் சக்தி வாய்ந்தது என கண்டுபிடிப்பு

Significant impact on the history of lithium the discovery that it has the power to change the state of consciousness in humans

லித்தியம் வெறும் பேட்டரிகளில் மட்டும் பயன்படுத்தம் பொருள் அல்ல. அவை நமது உணர்வுப் போக்குகளை மாற்றியமைக்கும் திறன் கொண்டவை என பல்கலைக்கழகத்தின் ஆய்வு மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

1940 களில் ஆஸ்திரேலிய மருத்துவர் John Cade, லித்தியம் உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது என்றும், பதட்டத்துடன் கூடிய மன இறுக்கத்திற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு்ள்ளது என்றும் கூறப்படுகிறது.

தற்போது, இருமுனையப் பிறழ்வு என்றழைக்கப்படும் Bipolar Disorder சிகிச்சைக்கு முதலாவதாக பரிந்துரைக்கப்படுவது லித்தியம் தான் என தெரியவந்துள்ளது.

Walter Brown, a clinical psychiatrist and professor at Brown University in the USலித்தியத்தை அடிப்படையாக கொண்டு மருந்துகள் மேற்கண்ட சிகிச்சைக்கு பயன்படும் போது அது பலமடங்கு பலனளிக்க கூடியதாக உள்ளது என அமெரிக்காவின் ப்ரெளன் பல்கலைக்கழக பேராசிரியர் மனநல மருத்துவர் Walter Brown கூறியுள்ளார். மனிதர்களின் உணர்வுப் போக்கை ஒருமித்த நிலையில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், தற்கொலை எண்ணத்தை தடுக்கும் சக்தி லித்தியம் மருந்துகளுக்கு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். சாதாரணமாக தற்கொலை எண்ணம் உள்ளவர்களை விட Bipolar Disorder -ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 மடங்கு அதிகமாக தற்கொலை எண்ணம் அதிகரிக்கும் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்களை லித்தியம் மருந்து உயிர்காக்க வைத்திருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Significant impact on the history of lithium the discovery that it has the power to change the state of consciousness in humans.800 களின் பின்னாளின் மஞ்சள் என்றழைக்ப்பட்ட லித்தியம் பாறைகள், நீர் நிலைகள், மண் பரப்பிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. 7up நிறுவனத்தின் குளிர்பானத்திலும் லித்தியேட் மூலப்பொருள் இருப்பதாக சொல்லப்பட்டது. மினரல் வாட்டர் என 20ம் நூற்றாண்டில் விற்பனைக்கு வந்த தண்ணீரிலும் லித்தியத்தின் தன்மை இருப்பதாகவும், அதை குடித்தால் வியாதிகள் குணமாகும் என்றும் சொல்லப்பட்டது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் மினரல் வாட்டரில் குளித்ததற்கு காரணமும் அதில் லித்தியம் உள்ளது என்பதால் தான்.

இந்நிலையில், தற்போதைய கண்டுபிடிப்புகள் மனிதனின் உடலில் மாற்றங்களை நிகழ்த்தும் தன்மை லித்தியத்திற்கு உண்டு என்பதும், ஆனால் அது எவ்வாறு செயல்படுகிறது என்பது தொடர்பான விரிவான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நரம்பு மண்டலத்தில் இயங்கி அதிவேகமான மாற்றங்களை பன்மடங்கு வீரியமாக கொடுக்கவல்ல லித்தியத்தின் இயங்கு தன்மை குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மனநல பேராசிரியர் ப்ரௌன் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/2S6pQXX