இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர் இடையே நடைபெற்று வரும் மோதல் சமீப நாட்களில் அதிகரித்து வரும் நிலையில், ஜெருசலேமில் உள்ள பழைய நகரத்தில் புனித தலமாக கருதப்படும் எல்லைச் சுவர் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பாலஸ்தீனிய தீவிரவாத அமைப்பான ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதியை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இப்பகுதியில் தான் அல்-அக்சா மசூதி அமைந்துள்ளது. இது இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதே வளாகத்தில் யூதர்களின் புனித தலமான டெம்பிள் மவுண்ட் எனும் யூத வழிபாட்டுத் தலமும் அமைந்துள்ளது.
துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் என்றும், 42 வயதான அந்த நபர் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் Shuafat புலம்பெயர்ந்தோர் முகாமில் வசித்து வந்தவர் என்றும், இவர் ஹமாஸ் பிரிவை சேர்ந்தவர் என்றும் பாதுகாப்பு அமைச்சர் Omer Bar Lev தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக அந்த நபர் மனைவியை விட்டு பிரிந்து அந்த பகுதியில் இருந்து வெளியேறி உள்ளதையும் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.
அதே நேரம் இந்த தாக்குதல் சம்பவத்தை ஹமாஸ் அமைப்பு கொண்டாடி வருகிறது. இது ஒரு வீர நடவடிக்கை என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது தங்கள் அமைப்பு தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் Latif al Qanou கூறியுள்ளார்.
சமீப நாட்களில் இரண்டாவது முறையாக ஜெருசலேமின் பழைய நகரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் எல்லை பாதுகாப்பு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன 16 வயது நபர் மற்றும் இரண்டு அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் – பாலத்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர்.
Link Source: https://ab.co/3HGJ0sB