Breaking News

2005ம் ஆண்டில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் சம்பவம் : CNN நெறியாளர் Chris Cuomo மீது Shelley Ross குற்றச்சாட்டு

The Newyork Times பத்திரிகைக்கு Shelly Ross அளித்துள்ள பேட்டியில் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு பார்ட்டியின் போது CNN நெறியாளர் Chris Cuomo தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். Shelley Ross தனது கணவருடன் பங்கேற்றிருந்த அந்த பார்ட்டியில் தன்னிடம் நெருங்கி கட்டியணைக்கும் வகையில் தன்னுடைய பின்புறத்தை Chris Cuomo தடவியதாக புகார் கூறியுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே அவரிடம் இனியும் நீங்கள் என்னுடைய உயர் அதிகாரியாக தொடர்வதற்கு வாய்ப்பில்லை என்றும், இது போன்ற செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது என்றும் கூறி நடைபெற்ற சம்பவத்தை தன்னுடைய கணவரிடம் Shelley Ross உடனடியாக தெரிவித்துள்ளார்.

Shelley Ross accuses CNN activist Chris Cuomo of sexual assault in 2005Chris Cuomo நடைபெற்ற சம்பவத்திற்கு உடனடியாக வருத்தம் தெரிவித்து ஈமெயில் அனுப்பியதாகவும், அதே நேரத்தில் இதே போன்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு செலிபிரிட்டி நபர் கைது செய்யப்பட்டதையும் அவர் குறிப்பிட்டு மன்னிப்பு கோரி இருந்ததாகவும் தனது நேர்காணலில் Shelley Ross தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Cuomo – விடம் கேட்ட போது, ABC ல் Executive ஆக இருந்த Shelley Ross- இடம் 16 ஆண்டுகளுக்கு முன்னர் பொது இடத்தில் நடைபெற்ற சம்பவம் என்றும் அதற்கு தான் மன்னிப்பு கோரி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

CNN தொலைக்காட்சியில் Prime Time நிகழ்ச்சிகளை வழங்கி வந்த Chris Cuomo வின் சகோதரர் Andrew Cuomo நியூயார்க் ஆளுநராக இருந்து பதவியை ராஜினாமா செய்தவர். இவர் பல்வேறு பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/2ZmaIcs