Breaking News

பெண் மீது சுறாமீன் தாக்குதல் எதிரொலி : கடற்கரைகள் 24 மணி நேரம் மூடல் !

shark attack on woman on NSW south coast beach and Beaches closed for 24 hours

New South Wales South கடற்கரையில் நீச்சல் மேற்கொண்ட பெண்ணை சுறா மீன் தாக்கியது. இதன் எதிரொலியாக Wallagoot Lake முதல் Pambula கடற்கரை அடுத்த 24 மணி நேரம் மூடப்படுகிறது.

shark attackBega Valley’s Citizen விருதை பெற்ற 63 வயதான Ms Bootes இன்று காலை 6.45 மணிக்கு Merimbula கடற்கரையில் நீந்திக்கொண்டிருக்கும்போது சுறா ஒன்று அவருடைய இடுப்பு மற்றும் தொடையை கடித்துள்ளது. Ms Bootes நேற்றிரவு 6.30 மணியளவில் ஆன்லைனில், தான் காலை நீச்சல் மேற்கொள்வதாகவும், தன்னுடன் நீச்சலுக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தற்போது Ms Bootes அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நல்ல நிலைமையில் இருப்பதாகவும், தனக்கு antibiotics அளிக்கப்பட்டதாகவும் தனது Facebook-ல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், சுறா தாக்குவதற்கு முன் அதனுடைய துடுப்புகள் Ms Bootes-க்கு அருகில் தண்ணீரில் மேலே பார்த்ததாக தெரிவித்தனர். மேலும் ஒரு சிலர் பெரிய விலங்காக இருந்ததாகவும், சுறாவாக இருக்குமோ என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில் துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முதலுதவி அளித்த பிறகு தான், சுறா தாக்குதல் என்பது உறுதியானது.

shark attack beach closedசுறாவின் வகை மற்றும் அளவைப்பற்றியும் The Department of Primary Industries ஆராய்ச்சி செய்து வருகிறது. சுறா இருப்பதை கண்டுபிடிக்க drone-கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.The Department of Primary Industries-வுடன் இணைந்து Lifesavers கடலில் என்னென்ன நடக்கிறது என்பதை கவனிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

Wallagoot Lake முதல் Pambula வரையிலான கடற்கரை அடுத்த 24 மணி நேரத்திற்கு மூடப்படுகிறது. இது அழகான தென்கடற்கரை. மக்கள் இதைவிட்டு போவது மிக கடினம் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இது உங்களின் உயிரை பாதுகாப்பது எங்களுடைய கடமை என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.