Breaking News

கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி கேரளாவைச் சேர்ந்த ஷஃபி விக்ரமன் என்பவர் ஐவி லீக் பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக வழங்கிய படிப்புகளில் சேர்ந்து மொத்தம் 130-க்கும் மேற்பட்ட படிப்புகளை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

Shafi Vikraman from Kerala has taken advantage of the corona curfew

கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இவ்வுலகம் இதுவரை சந்தித்திராத புதிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. உயிரை பறிக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகலே ஊரடங்குக்குள் சென்றது. பலருடைய தினசரி வாழ்க்கையே மாறிப்போனது. வீடும் வீடு சார்ந்த வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.

பலரும் இந்த நிலைமையை சமாளிக்க போராடி வந்த நேரத்தில், கேரளாவைச் சேர்ந்த ஷஃபி விக்ரம் கேரளாவைச் சேர்ந்த இவர் கோர்ஸரா மற்றும் WHO-வின் கற்றல் பிரிவு போன்ற தளங்கள் ஆன்லைன் வழியாக வழங்கி வரும் படிப்புகளில் சேர்ந்தார். அதன்படி இந்த ஊரடங்கு காலத்தில் இவர் மொத்தம் 145 படிப்புகளை கற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.

Shafi Vikraman from Kerala has taken advantage of the coronaஅதுமட்டுமில்லாமல் உலகளவில் சிறந்த கல்வியை வழங்கி வரும் பிரின்ஸ்டன், யேல், கொலம்பியா மற்றும் வார்டன் போன்ற பல்கலைக்கழகங்கள் வழங்கிய 20 படிப்புகளிலும் தன்னை இணைத்துகொண்டார். நிதி, ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, தடயவியல், பிளாக்செயின், கிரிப்டோகரன்சி, உணவு மற்றும் பான மேலாண்மை மற்றும் உளவியல் போன்ற பல்வேறு படிப்புகளை கற்று தேர்ந்தார்.

55 வயதை கடந்துவிட்ட ஷஃபி விக்ரமனுக்கு கற்றல் எப்போதும் சிறந்த அனுபவமாகவே இருந்துள்ளது. உலகின் பிரசித்திப்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது பலருடைய கனவு. அது ஆன்லைன் வழியாக நிறைவேறி இருப்பது ஷஃபி விக்ரமனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 16 நாடுகளில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் நடத்திய படிப்புகளில் சேர்ந்து சான்றிதழ் பெற்ற இவர், தற்போது மேலும் 22 நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் வழங்கி வரும் படிப்புகளில் சேர்ந்து தொடர்ந்து படித்து வருகிறார்.

Link Source: https://bit.ly/3JXYbir