Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் இளம் சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் : முன்னாள் நீச்சல் பயிற்சியாளரை கைது செய்தது போலீஸ்

Sexual harassment of minors in Western Australia. Former swimming coach arrested by police

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான சிறார்கள் மீதான பாலியல் புகாரில் சிக்கி கைதாகி உள்ளார் முன்னாள் நீச்சல் பயிற்சியாளர் John Wright.

78 வயதான இவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உயரடுக்கு சிறார்களுக்கான நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். அந்த கால கட்டத்தில் சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் John Wright -ஐ கைது செய்த போலீசார் அவரை Bunbury நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

குயின்ஸ்லாந்தில் 1980 களில் பயிற்சியாளராக பணியாற்றிய காலத்தில் இது போன்ற துன்புறுத்தல் சம்பவங்களில் அவர் ஈடுபட்டதாகவும், இது குறித்து காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இது வராலாற்று முக்கியம் வாய்ந்த வழக்காக பார்க்கப்படுகிறது.

John Wright பயிற்சியாளராக இருந்தபோது பாதிக்கப்பட்ட நபர்களிடம் ABC செய்தி நிறுவனம் தனித் தனியாக நேர்காணல் செய்துள்ளது. இதன் மூலமாக குயின்ஸ்லாந்து மட்டுமல்லாமல் 1970களில் Rockhampton- ல் நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றிய போதும் John Wright பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் நேரடி விசாரணைக்காக Bunbury நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட John Wright தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Link Source: https://ab.co/3ncHHs0