Breaking News

10 ஆண்டுகளுக்கு முன் அளிக்கப்பட்ட பாலியல் புகார் : தாஸ்மானியா தொழிலாளர் கட்சித் தலைவர் David O’Byrne ராஜினாமா

Sexual harassment filed 10 years ago, Tasmanian Labor leader David O'Byrne resigns.

2007 – 2008 காலகட்டத்தில் மதுபானம் விருந்தோம்பல் அமைப்பின் தலைவராக இருந்தபோது அந்த அமைப்பில் பணியாற்றிய இளநிலை ஊழியரான 22 வயது பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியது மற்றும் வெளி பணியிடங்களில் இரண்டு முறை முத்தமிட்டது தொடர்பாக அவர் மீது சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக அவருக்கு தனது வாய்வழி கண்டனங்களையும் அவர் பதிவு செய்து இருந்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

Sexual harassment filed 10 years ago, Tasmanian Labor leader David O'Byrne resignsஇந்நிலையில் முன்னாள் தலைவர் Rebecca White ராஜினாமாவை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் பிராங்கிளின் தொழிலாளர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற நிலையில் பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார் கட்சியின் உறுப்பினராக தாம் தொடர்ந்து செயல்படுவேன் என்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும் David O’Byrne கூறியுள்ளார்.

இதனிடையே கடந்த புதன்கிழமை கடிதம் வாயிலாக சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும் ஜூனியர் பெண் ஊழியருக்கு குறுஞ்செய்திகள் மற்றும் முத்தமிட்ட விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்துடன் நடந்த சம்பவம் என்று தான் நினைத்ததாகவும் தற்போது அதை தவறாக எண்ணுவதாகவும் கூறியுள்ளார்.

மாநில தொழிலாளர் துறை செயலாளர் இந்த விவகாரம் குறித்து ரகசியமாக விசாரணை நடத்தப்படும் என்று தனக்கு உறுதி அளித்து இருப்பதாகவும், இது ரகசிய விசாரணை என்ற காரணத்தால் இதில் தான் மேலும் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றும் David O’Byrne தெரிவித்துள்ளார்.

Sexual harassment filed 10 years ago, Tasmanian Labor leader David O'Byrne resigns,இதனிடையே புதிய தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தான் தொடர்ந்து பிராங்க்ளின் உறுப்பினராக நீடிப்பேன் என்றும் தன் வாழ்நாள் முழுவதும் தனக்கான பணிகள் இருப்பதாகவும் இந்த புகார் அதை பாதித்து விடக்கூடாது என்பதற்காகவே தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் David O’Byrne கூறியுள்ளார். இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் Kristie Johnston, சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் போது தான் அந்த அமைப்பில் இருந்ததாகவும், David O’Byrne முழுவதுமாக அரசியலை விட்டு விலக வேண்டும் என்றும் காட்டமாக கூறியுள்ளார்.

தலைவர் பதவியில் இருந்து மட்டுமல்ல அவர் நாடாளுமன்றத்தில் இருந்தே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தகுதியான நபரை தலைவர் பொறுப்புக்கு அமர்த்த வேண்டும் என்றும் Kristie Johnston கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3ypjh2x