Breaking News

மக்கள்தொகை கணக்கெடுப்பில் பாலியல் கேள்விகள்- பால்புதுமையினர் கோரிக்கை..!!

மக்கள்தொகை கணக்கெடுப்பில் பாலீர்ப்பு மற்றும் பாலின அடையாளம் குறித்து கேள்விகளை இடம்பெறச் செய்ய வேண்டும் என பால்புதுமையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sex questions in the census- Dairy demand

ஆஸ்திரேலியாவில் கடந்த 2021-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் பாதுகாப்பு சேவை மற்றும் நீண்டகால சுகாதார திட்டங்கள் குறித்த கேள்விகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் பாலீர்ப்பு மற்றும் பாலின அடையாளம் தொடர்பான எந்த கேள்விகளும் இடம்பெறவில்லை.

Sex questions in the census- Dairy demand.இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் தலைவர் டேவிட் க்ரூன், பாலியல் தொடர்பான கேள்விகளை 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இடம்பெறச்செய்ய முயற்சித்தோம். ஆனால் ஆஸ்திரேலியா அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறியுள்ளார். வரும் 2026-ம் ஆண்டில் பாலீர்ப்பு மற்றும் பாலின அடையாளம் குறித்து கேள்விகளை மக்கள்தொகை கணக்கெடுப்பில் இடம்பெறுவதற்கு மீண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

 

இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பில் பால்புதுமையினர் தொடர்பான கேள்விகளை இடம்பெறச் செய்வது குறித்து ஆஸ்திரேலிய புள்ளியல் அலுவலகம் பொதுமக்களிடையே விரைவில் ஆய்வு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகள் பால்புதுமையினர், பாலீர்ப்பு மற்றும் பாலின அடையாளம் தொடர்பான கேள்விகளை தங்களுடைய மக்கள்தொகை கணக்கெடுப்புக்குள் கொண்டுவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.