Breaking News

விக்டோரியாவில் எம்.பி கெளசல்யா வகேலாவின் குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை : பணியிட பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் வரை விசாரிக்கத் திட்டம்

Serious investigation into allegations of MP Kaushaliya Vaghela's in Victoria. Workplace Safety Surveillance Organization plans to investigate up to Premier Daniel Andrews

சிவப்பு சட்டை ஊழல் தொடர்பான IBAC விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில், சொந்த கட்சி எம்பிக்கு எதிராக வாக்களித்தது தொடர்பாக பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

அந்த வகையில் எம்பி கவுசல்யா வகேலா தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பணியிட பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அந்த அமைப்பு விக்டோரியா மாகாணத்தின் பிரிமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் அலுவலகம் வரை தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி என்று கூறப்படுகிறது.

அதேநேரத்தில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி வெறும் விளம்பர நோக்கத்திற்காக இதுபோன்ற கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளை எம்பி கவுசல்யா வகேலா முன்வைத்து வருவதாக ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

Serious investigation into allegations of MP Kaushaliya Vaghela's in Victoria. Workplace Safety Surveillance Organization plans to investigate up to Premier Daniel Andrews..2019 ஆம் ஆண்டு முதல் தான் தெரிவித்துவரும் பணியிட பாதுகாப்பு புகார்கள் குறித்து அந்த அமைப்பிடம் புகார் தெரிவித்து இருப்பதாகவும், ஆனால் அரசு தரப்பில் அதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் எம்பி கவுசல்யா வகேலா கூறியுள்ளார். அதைவிட பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பானது கௌசல்யா வகேலா வகையில் தொடர்பான ஊடக நேர்காணல், செய்திகள் மற்றும் அவர் சமூக வலைதளங்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்களையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் குறிப்பிட்ட அமைப்பின் ஆலோசகர் பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் அமைச்சர் Ben Carroll கூறியுள்ளார். முன்னாள் எம்பி மீதான சிவப்பு சட்டை ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்தும் பணியிட பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் தொழிலாளர் கட்சி உள்ளாகவே பல்வேறு மோதல்கள் வெடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பாதுகாப்பு அமைப்பின் விசாரணை சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றும், இது தொடர்பான புகார்கள் எழுவது மிகவும் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டிய நிலையை உணர்த்துவதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பணியிட பாதுகாப்பு புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் வரை விசாரிக்கப்பட்டு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://ab.co/3LHlGgx