Breaking News

மெல்போர்னில் கட்டுமான தொழிலாளர் களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Security has been beefed up in Melbourne following a clash between construction workers and police

மெல்போரினிக் கொரோனா தொற்று கட்டுமான இடங்களில் பரவி வருவதை தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்டது.

தடையை நீக்க வலியுறுத்தியும், தடுப்பூசிக்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு சிலர் விக்டோரிய பார்லிமென்ட் நோக்கி நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது சிலர் அதனை சமூக வலைத்தளங்களில் நேரலை செய்தனர்.

Security has been beefed up in Melbourne following a clash between construction workers and police.காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களை தடுக்கும் பணியிக் ஈடுபட்டபோது இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் குடிநீர் பாட்டில் போன்றவற்றை வீசி எறிந்ததால் காவலர்கள் ஒரு சிலருக்கும் பத்திரிக்கையாளருக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காவல்துறை இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வரம்பு மீறி நடந்து கொண்டதாகவும், அவர்கள் ரவுடிகள் என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்.

அதேபோன்று கட்டுமான நிறுவனத்தின் சங்கமும் இதுபோன்ற வன்முறையை தூண்டக்கூடிய வகையில் போராட்டங்களில் ஈடுபடுவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Security has been beefed up in Melbourne following a clash between construction workers and police..இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விக்டோரிய மாகாண பிரிமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் இதுபோன்ற போராட்டங்கள் கடும் மன உளைச்சலை ஏற்படுவதாகவும் ஏற்படுத்துவதாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். விக்டோரிய மக்கள் முழுவதுமாக ஒத்துழைப்பு கொடுக்கும் நிலையில் இதுபோன்ற மேற்கொள்ளக்கூடிய போராட்டங்கள் நோக்கத்தை சீர்குலைக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதேபோன்று இந்த போராட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் வேறு சில வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்களும் பங்குபெற்றதாகவும் இவர்கள் இந்த போராட்டத்தை தவறான திசையில் வழி நடத்திச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Link Source: https://ab.co/3nXCgzc