Breaking News

ரகசிய உறவு, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசராணை : ஆணைத்தின் முன் நியூ சவுத் வேல்ஸ் முன்னாள் ப்ரீமியர் Gladys Berejiklian தெரிவித்த தகவல்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் முன்னாள் பிரீமியர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் ஊழலுக்கு எதிரான ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் பொது அறக்கட்டளையின் மூலமாக நிதி முறைகேடு செய்யப்பட்டதா என்பது குறித்து முன்னாள் ப்ரீமியர் Gladys Berejiklian இடம் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Secret relationship, corruption probe. Former New South Wales Premier Gladys Berejiklian reports before commissionDaryl Maguire உடனான ரகசிய உறவு குறித்து விசாரணையின் போது பல்வேறு தகவல்களை Gladys Berejiklian தெரிவித்து இருப்பதாகவும் இதன் மூலமாக பொது அறக்கட்டளை எவ்வாறு முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் பல்வேறு கேள்விகளை ஆணைய அதிகாரிகள் எழுப்பி வருகின்றனர். மேலும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை மிகவும் கடினமாக இருந்ததாகவும், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு எழுந்த கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் பணியாளர் தலைமை Neil Harley தெரிவித்துள்ளார்.

Gladys Berejiklian -ன் தனிப்பட்ட உறவு குறித்தும், முடிவாக சொல்லப்பட்ட விஷயத்தில் மேலும் கருத்து சொல்வதும் சரியான முறை அல்ல என்றும் Neil Harley கூறியுள்ளார். விசாரணை என்பது வெறும் ரகசிய உறவு குறித்தான இதுமட்டுமே அல்ல என்றும் அதைத் தாண்டிய ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

Secret relationship, corruption probe., Former New South Wales Premier Gladys Berejiklian reports before commission.மில்லியன் டாலர் நிதி முறைகேடு விவகாரம் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் இதுவரை கிடைக்கப் பெற்று இருப்பதாகவும் அதன் அடிப்படையில் முன்னாள் ப்ரீமியர் Gladys Berejiklian பொது அறக்கட்டளையின் மூலமாக நிதி முறைகேடு செய்யப்பட்ட விவகாரம் குறித்து தொடர்ந்து ICAC அமைப்பின் மூலமாக விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. Gladys Berejiklian வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஆணையத்தின் முன்பு ஆஜராக இருப்பதாகவும், மேலும் புதிதாக தயாரிக்கப்பட்ட சாட்சியங்களின் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்ந்து ஆணையத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் Maguire உடனும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக ICAC தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/314X8v4