Breaking News

Seasonal worker’ ன் வெற்றிடத்தை உள்ளூர்வாசிகள் நிரப்புவார்கள் என Tasmania நம்புகிறது! அவர்கள் நிரப்புவார்களா ?

கொரோனா நோய் தொற்றின் காரணமாக வரும் அக்டோபர் 26 வரை Tasmaniaவின் எல்லைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதால், அந்த நாட்டு அரசு உள்ளூர் வாசிகளை இந்த முறை சீசன் பணியாளர்களுக்கு பதிலாக அறுவடையில் பணியமர்த்த முடிவு செய்துள்ளது. ஆனால் சில விவசாயிகள் அவர்களுக்கே அங்கு வேலை போதிய அளவில் வேலை கிடைக்கவில்லை என வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலிருந்தே நாடு மற்றும் மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லைகள் முற்றிலுமாக மூடப்பட்டது. மேலும் விமானப்போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளும் ஆஸ்திரேலியாவில் நிறுத்தப்பட்ட அதேசமயம் ஒரு சில விலை உயர்ந்த விமானங்கள் மட்டும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டது.

Tasmaniaவில் உள்ள பழ விவசாயிகள் இந்த ஆண்டு ஆரம்பத்தில் சுமார் 1,200 seasonal workers பழ அறுவடைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் Tongan seasonal worker நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய Liaison officer 1000 பேர் தங்களது சொந்த மண்ணில் வேலை செய்யாமல் Tasmaniaவை நம்பி நின்று கொண்டிருக்கின்றனர். அதில் சிலர் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் வேறு வேலைக்கு செல்வதற்காக தங்களது குடும்பத்தாருடன் தங்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கு அரசு அல்லது தொழிலாளர்களால் வேறு ஏதேனும் ஏற்பாடு செய்தால் அது ஒரு மிகச்சிறந்த செயலாக இருக்கும் அதே சமயம் நான் அதுபோன்ற விவாதங்களில் ஈடுபடுவதை விரும்பவதில்லை. மேலும் நான் ஒருசில தொழிலாளர்களிடம் பேசினேன், அவர்கள் எந்த மாதிரியான திட்டம் வைத்திருக்கிறார்கள் மீண்டும் பணிக்கு வருவதற்காக என Mr.Veka கூறியுள்ளார்.

பெரும்பான்மையான தொழிலாளர்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்ட தங்கும் இடத்துடன் தங்களது பணிக்கு திரும்பி செல்வதையே விரும்புகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் Tasmaniaவில் அறுவடை காலமாக இருந்து வருகிறது மற்றும் சாதாரண வரும் வருடங்களில் கிட்டத்தட்ட 8000 சீசனல் பணிகள் பல்வேறு பழ அறுவடை தொழிலில்களில் தேவைப்படுகின்றது. பொதுவாக 8000 பணியாளர்கள் மற்றும் 2000 உள்ளூர்வாசிகள் இந்த அறுவடை நாட்களில் பழ அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்ச அறுவடை நாட்களில் 350 பணியாளர்கள் தேவையாக இருக்கிறது மற்றும் சாதாரண நாட்களில் 550 பணியாளர்கள் ஏழு நாட்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகின்றனர் என Hillwood Berries ன் ஜெனரல் மேனேஜர் Simon Dornauf கூறியுள்ளார்.

மாணவர்களிடமிருந்து நிறைய விசாரணைகள் வருகிறது, அதற்கு தொடர்ந்து பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் இது மாணவர்களுக்கு ஒரு சிறந்த பணியாகும் இவர்கள் குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அல்லது விடுமுறை நாட்களில் இந்த பணி அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும் என Mr.Tack கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கூட்டாட்சி அரசு அறிவித்திருந்த பட்ஜெட்டின் படி தொழிலாளர்களுக்கு வாரம் ஒன்றிற்கு 16-29 வயது உடையவர்களுக்கு 200 டாலர்கள்களும் , 30-35 வயது உடையவர்களுக்கு 100 டாலர்கள் என்ற கணக்கும் “job makers” நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.