Breaking News

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஐந்தாவது நாளாக தொடரும் காணாமல் போன 3 வயது சிறுவனை தேடும் பணி : ஓடையில் இருந்த நீரை முழுவதுமாக வெளியேற்றி தேடுதல் பணியை தீவிரப்படுத்த மீட்புப்படை

Search for missing 3-year-old boy continues for fifth day in New South Wales, Australia Rescue team intensifies search for water completely out of stream

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் Kendall பகுதியிலுள்ள சிற்றோடை ஒன்றில் காணாமல் போன 3 வயது சிறுவன் William Tyrrell அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதி தேடுதல் பணி நடைபெறும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மிதந்து வந்த காரணத்தால் அங்கு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

Search for missing 3-year-old boy continues for fifth day in New South Wales, Australia, Rescue team intensifies search for water completely out of streamஇதன் காரணமாக சிற்றோடையில் இருந்த நீரை முழுவதுமாக மோட்டார் மூலமாக வெளியேற்றும் பணியை காவல்துறையினருடன் இணைந்து மீட்புப் படையினர் மேற்கொண்டனர். உள்ளூர் தீயணைப்புப் படையினருடன் இணைந்து நீரை முழுமையாக வெளியேற்றி சிறுவனை தேடும் பணி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மேலும் அந்த ஆடையின் ஒரு பகுதி உள்ளிட்ட சேகரிக்கப்பட்ட பொருட்கள் தடயவியல் சோதனைக்காக சிட்னிக்கு அனுப்பப்பட்டுள்ளது. காணாமல் போன சிறுவனை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிவப்புநிற ஆடையின் நூல்கள் உள்ளிட்டவையும் புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கிடைத்துள்ள ஆடை தொடர்பான தடைகள் இந்த தேடுதல் பணியில் முக்கியமான ஆதாரங்கள் என்றும், இதனை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Search for missing 3-year-old boy continues for fifth day in New South Wales, Australia.. .Rescue team intensifies search for water completely out of streamதிங்கட்கிழமை முதல் காவல் துறையினருக்கு புதிய கோணங்களில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த இருப்பதாகவும், தற்போது கிடைத்திருக்கும் குறைந்தபட்ச ஆதாரங்களைக் கொண்டு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தடயவியல் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு உதவிகரமாக இருப்பதாகவும் ஆனால் குறிப்பிட்ட வழக்குகளில் முடிச்சுக்களை அதற்கான உரிய ஆதாரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் William Tyrrell கடந்த 2014ஆம் ஆண்டு Kendall பகுதியில் தனது பாட்டி வீட்டின் முன்பு இருந்து காணாமல் போன நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் தேடுதல் பணியில் குறைந்தபட்ச ஆதாரங்கள் மட்டுமே கிடைத்திருப்பதாகவும் இதன் அடிப்படையில் ஒரு புலனாய்வு வழக்கை நடத்துவது மிகவும் சிரமமான காரியம் என்றும் கூறப்படுகிறது.

2019 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த வழக்கில் இருந்த முக்கிய விசாரணை அதிகாரிகள் விலகிய நிலையில் தற்போது மீண்டும் இந்த வழக்கு சூடுபிடித்து இருப்பதாகவும் தேடுதல் வேட்டையின் அடிப்படையில் சிட்னியில் சோதனைக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களின் முடிவுகள் வழக்கை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://ab.co/3nG7gmN