ஆஸ்திரேலியாவில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு சேகரிக்கும் பணிகளில் பிரதமர் ஸ்காட் மோரீசன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆண்டனி அல்பனீஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா மாகாணங்களில் அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது வேலை வாய்ப்புகள் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான தங்களுடைய திட்டங்களை குறிப்பிட்டு பேசினர்.
இந்த வார இறுதிக்குள் பொதுத் தேர்தலுக்கான தேதியை பிரதமர் மோரீசன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல், பொருளாதாரத்தில் மந்தநிலை, பாதுகாப்பு அச்சுறுத்தல் என பல்வேறு விவகாரங்களில் மோரீசன் அரசாங்கம் சரிவை சந்தித்துள்ளன. அதனால் தேர்தல் களம் எதிர்க்கட்சித் தலைவர் ஆண்டனி அல்பனீஸுக்கு ஆதரவாக இருப்பதாகவே அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.
Link Source: https://bit.ly/3j37tgI