Breaking News

Sarah Mc Bride, அமெரிக்க வரலாற்றின் மாநில senator ஆன முதல் திருநங்கை!

Sarah Mc Bride, அமெரிக்க வரலாற்றின் மாநில senator ஆன முதல் திருநங்கை ஆவார். செவ்வாய் கிழமை பொதுத்தேர்தலில் Delaware Senate-ற்கான போட்டியில் ஜனநாயக கட்சி வென்றது. மாநிலத்தின் மேலவையில் பதவியேற்ற முதல் திருநங்கை எனற பெருமையை பெற்றார்.

எங்கள் ஜனநாயகம் ஒரு LGBTQ+ குழந்தைக்கும் பொதுவானது என்பதை இந்த முடிவு காட்டுகிறது. Delaware தொடர்ந்து கோவிட் நெருக்கடியில் இருப்பதால் உழைக்கும் குடும்பங்களை முன்னேற்ற புதிய கொள்கைகளை செயல்படுத்த வேண்டிய நேரம் இது என்று Ms Sarah Mc Bride தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒரு சில திருநங்கைகள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சூழ்நிலையில் மாநிலத்தின் செனட்டர் பதவியை வகித்த முதல் திருநங்கை Ms McBride ஆவார்.

குடும்ப ஊதியம், மருத்துவ விடுப்பு, சுகாதாரத் துறையில் செலவை குறைத்து போட்டியை அதிகரித்தல், பொதுப்பள்ளிகளை வலுப்படுத்துதல் போன்ற கொள்கை திட்டத்தில் Ms Sarah செயல்பட்டு வந்தார்.

அமெரிக்க பல்கலைகழகத்தில் படித்தபொழுது ஒபாமா வெள்ளை மாளிகையில் பயிற்சி பெற்றார். அனைத்து கட்டத்திலும் பணியாற்றிய முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.

Trans உரிமை ஆர்வலரான Ms McBride தனது Delaware மாநிலத்தில் LGBTQ+ பாதுகாப்பு போரட்டத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தார். சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான அவரது முயற்சிகளை பாராட்டி முன்னாள் ஆளுநர் Jack Markell, Order of the First State விருதை Ms McBride-ற்கு வழங்கினார்.

இதனிடையில் வடக்கில் Taylor Small என்கின்ற திருநங்கை Vermont மாநில சட்ட மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். அந்த மாநிலத்தின் முதல் Trans பிரதிநிதி ஆனார். இந்த இருவரின் வெற்றி மேலும் ஐந்து திருநங்கை சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் என Victory Fund அமைப்பு தெரிவித்துள்ளது.