Breaking News

நாளுக்கு நாள் தீவிரமடையும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் : ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி எச்சரிக்கை

உக்ரேன் மீதான போரில் ஏராளமான அப்பாவி மக்களை கொள்ளும் வகையில் ரஷ்யா தனது போர் உத்திகளை மாற்றி வருவதாக உக்ரைன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் ரசாயன ஆயுதங்கள், பயன்படுத்தியதாகவும் இதன் காரணமாக 10 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இனிவரும் நாட்களில் தலை நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தனது படைகள் அனைத்தையும் திரட்டி வருவதாகவும், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை அனைத்தும் மேற்குலக நாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

Russia's war on Ukraine intensifies. Ukrainian President Selensky warns Russia prepares to use chemical weapons.போரை நிறுத்துவதற்கான மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் துருக்கியில் நடைபெற்ற நான்காவது கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு சில உடன்பாடுகள் எட்டப்பட்டன. ஆனால் தொடர்ந்து போரை நிறுத்துவதற்கான எந்தவித சமிக்ஞையும் ரஷ்யா தரப்பில் இருந்து கிடைக்கப் பெறவில்லை என்றும், ரஷ்யா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நிலையில் உக்ரைன் தரப்பில் பதிலடி கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ரஷ்யா மேற்கொண்டு வரும் அனைத்து போர் நடவடிக்கைகளையும் உக்ரைன் வெளியுறவுத்துறை கண்காணித்து வருவதாகவும் கிழக்கு நகரங்களான Donetsk மற்றும் Lukansk ஆகிய பகுதிகளை முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையிலான தாக்குதலை நடத்துவதற்கு ரஷ்ய ராணுவம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ரஷ்ய ராணுவத்தின் வாகனங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும், அப்பாவி மக்கள் மீது மோசமான தாக்குதலை ரஷ்ய ராணுவம் அரங்கேற்றி வருவதாகவும் உக்ரைன் வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

Russia's war on Ukraine intensifies. Ukrainian President Selensky warns Russia prepares to use chemical weapons,கிவிவ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்களது படைகளை முழுவதுமாக திரும்பப் பெற்றுக்கொள்வதாக ரஷ்யா அறிவித்திருந்தாலும் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், குறிப்பிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்ய ராணுவம் மிக மோசமான ரசாயன ஆயுதங்கள் மூலமாக தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை மேற்குலக நாடுகள் தங்களது பொருளாதார தடையின் காரணமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் உக்ரைன் கேட்டுக் கொண்டுள்ளது.

குண்டு மழை பொழிந்து உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் ரஷ்யாவின் பல்வேறு டாங்கிகள் அழிக்கபட்டதாகவும் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிவிவ் நகருக்கு அருகிலுள்ள Borodyanka பகுதியில் ஏராளமான அப்பாவி பொது மக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும் ரஷ்ய ராணுவம் குண்டுமழை பொழிந்து நடத்திய தாக்குதலில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Link Source:  https://ab.co/3EcAQa3