Breaking News

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் முக்கிய நகரங்களில் ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் பலி : மரியுபால் நகரில் இருந்து மனிதாபிமான வழித்தடங்கள் வாயிலாக மக்கள் வெற்றிகரமாக வெளியேற்றம்

Russia's war on Ukraine continues, missile attacks on major cities kill civilians, Successful evacuation of people from Mariupol via humanitarian routes

உக்ரைனின் கிவிவ் மற்றும் Antopol நகரங்களின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மரியுபால் நகரில் இருந்து மனிதாபிமான வழித்தடத்தில் கார் மூலமாக பொதுமக்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

உக்ரைனின் மிகப்பெரிய தொழிற்சாலையான விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதில் இருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்ததாகவும் கிவிவ் அரசு தெரிவித்துள்ளது.

Russia's war on Ukraine continues, missile attacks on major cities kill civilians.. Successful evacuation of people from Mariupol via humanitarian routesகுடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்ததாகவும், மேற்கு Antopol நகரத்தில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தாகவும் Rivne பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார். நேட்டோ உறுப்பு நாடான போலந்தின் எல்லையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு Luhansk பகுதியில் 10 நகரங்கள் உள்ளிட்ட 10 மனிதாபிமான வழித்தடங்கள் வாயிலாக பொதுமக்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில் ரஷ்யா இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக துணை பிரதமர் Iryna Vereshchuk கூறியுள்ளார்.

மனிதாபிமான வழித்தடத்தில் பொதுமக்கள் வெளியேற தடையாக உணவு மற்றும் மற்ற வாகனங்கள் செல்வதை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். உக்ரைன் மீதான போரை கடந்த மாதம் 24ம் தேதி ரஷ்யா தொடங்கியதில் இருந்து மரியுபோல் நகரில் இதுவரை 2 ஆயிரத்து 500 குடியிருப்புவாசிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அதிபரின் ஆலோசகர் Oleksiy Arestovych தெரிவித்துள்ளார்.

Russia's war on Ukraine continues, missile attacks on major cities kill civilians. Successful evacuation of people from Mariupol via humanitarian routesகுறிப்பிட்ட நேரங்களில் மனிதாபிமான வழித்தடங்கள் வாயிலாக மக்க வெளியேற்றலாம் என்ற அறிவிக்கப்பட்ட பின்னரும் அந்த வழித்தடங்களில் கடுமையான தாக்குதலில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டு வருவதாகவும், அதே போன்று மற்ற பகுதிகளில் வரும் உதவிகளை அவர்கள் தடுத்து வருவதாகவும் அதிபரின் ஆலோசகர்0 Oleksiy Arestovych கூறியுள்ளார். திங்களன்று ஒரே நாளில் 160க்கும் மேற்பட்ட கார்களின் கான்வாய் மரியுபோல் நகரில் இருந்து புறப்பட்டதாகவும், இதன் மூலம் ஏராளமான மக்கள் உக்ரைனில் இருந்து மனிதாபிமான வழித்தடத்தின் வாயிலாக வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3q8sESx