Breaking News

ரஷ்யா நாடு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்துள்ளது மேற்கு உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Russia's test of domestically-made intercontinental ballistic missile has caused a stir among Western nations.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று, வடக்கு ரஷ்யப் பகுதியிலுள்ள பிளஸிஸ்க் ஏவுதளத்தில் இருந்து ICBM ஏவுகணையை ரஷ்யா விண்ணில் செலுத்தி சோதனை செய்தது.

Russia's test of domestically-made intercontinental ballistic missile has caused a stir among Western nations..அது கிழக்கு ரஷ்யாவின் தீப கற்ப பகுதியான கம்சட்கா பகுதியில் விழுந்து வெடித்தது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவின் உள்நாட்டு தயாரிப்பால கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நவீனமான தொழில்நுட்ப பண்புகளைக் கொண்டுள்ளது. இது அனைத்து தலையீடுகளையும் கடந்து, இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என்று கூறினார்.

சர்மாட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையை ரஷ்யா பல ஆண்டுகளாக தயாரித்து வந்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வயோவதா என்கிற ஏவுகணைக்கு மாற்றாக இது அமையவுள்ளது. உலகின் சக்திவாய்ந்த ஏவுகணையாக சர்மாட் தயாராகியுள்ளது. இது நாட்டின் அணுசக்தி திறனை கணிசமாக உயர்த்தும் என்று ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.