Breaking News

ரஷ்யாவின் முதன்மை போர்க்கப்பலான Moskva கருங்கடல் பகுதியில் சேதமடைந்து கடலில் மூழ்கியதாக ராணுவம் அறிவிப்பு : தாங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி கப்பலை அழித்ததாக உக்ரைன் தகவல்

உக்ரைன் மீது ரஷ்யா 50 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.

Russia's flagship warship Moskva wrecked in the Black Sea, Ukraine says..இந்நிலையில் கருங்கடல் பகுதியில் இருந்த ரஷ்யாவின் முதன்மை போர்க்கப்பலான Moskva சேதமடந்த நிலையில், கடலில் மூழ்கிவிட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் தங்களது கட்டுப்பாட்டு பகுதியில் மோசமான தாக்குதலை அரங்கேற்ற ரஷ்ய ராணுவம் திட்டமிருந்த நிலையில் அவர்களது கப்பலை தங்கள் நாட்டு ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்தாக உக்ரைன் தரப்பில் வெளியுறத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று கருங்கடலில் ரஷ்யாவின் போர் கப்பல் பயங்கர தீப்பிடித்து எரிந்தது. ரஷ்ய பாதுகாப்பு படையில் முக்கிய பங்காற்றி வந்த போர்கப்பல் Moskva கருங்கடலில் போருக்கான ஆயுதங்கள் மற்றும் வீரர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் , கடுமையான சூறாவளி காற்றினால் சேதமடைந்து தீப்பிடித்து எரிந்து கடலில் முழ்கியதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த போர்கப்பல், ரஷ்யாவின் கடற்படை தாக்குதலை தலைமை தாங்கி நடத்தி வந்தது.
இந்நிலையில் தங்களது ஏவுகணை தாக்குதலால் தான் போர்கப்பல் தீப்பிடித்து சேதமடைந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதலை ரஷ்யா மறுத்துள்ளது. போர்கப்பல் சூறாவளி காற்றினால் தீப்பிடித்ததால் சேதமடைந்து முழ்கியுள்ளதாக மட்டும் கூறியுள்ளது.

Russia's flagship warship Moskva wrecked in the Black Sea, Ukraine says.,,மேலும் உக்ரைனின் முக்கிய நகரமான மரியுபோலை ரஷ்ய படை கைப்பற்றியுள்ளது. மேலும் அங்கு 500 க்கும் மேற்பட்டவர்களை பிணை கைதிகளாக ரஷ்யா படையினர் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் நாட்டை விட்டு சுமார் 46 லட்சம் பேர் வெளியேறி மற்ற நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து குண்டு மழைகளை ரஷ்யா பொழிந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டி வருகிறார்.

அதற்கு சாட்சியாக, புச்சா நகரங்களில் கொத்து கொத்தாக கிடந்த சடலங்களின் புகைப்படங்கள் நெஞ்சை உலுக்கியது. உக்ரைன் – ரஷ்யா போரில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.