Breaking News

ரஷ்யா மேற்கொண்டுள்ள உக்ரைன் மீதான தாக்குதல் எதிரொலி : ஆயிரக்கணக்கானோர் தப்பிச் செல்லும் நிலையில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் 137 பலியானதாக உக்ரைன் அதிபர் தகவல்

ரஷ்யா மேற்கொண்ட கடுமையான தாக்குதல் காரணமாக நிலைகுலைந்துள்ள உக்ரைன் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. வான் வழித் தாக்குதல் காரணமாக முக்கிய நகரங்களில் இருந்த ஏராளமான பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற முயற்சித்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ரயில், கார் மூலமாக உக்ரைன் பகுதிகளில் இருந்து வெளியேறிதன் காரணமாக கடும் நெரிசல் ஏற்பட்டது. புவி அரசியலை மாற்றி எழுதும் முயற்சியல் ரஷ்ய அதிபர் புதின் ஈடுபட்டுள்ளதாகவும், முழு அளவிலான போரை உக்ரைன் மீது நடத்தி உள்ளதன் காரணமாக அதற்கான விளைவுகளை சந்தித்து வருவதாகவும் உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

Russia's attack on Ukraine echoes. Ukrainian president says 137 soldiers, civilians killed as thousands flee.ரஷ்யா மேற்கொண்ட போர் காரணமாக இதுவரை ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 137 பேர் உயிரிழந்து விட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளதாகவும் உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார். ராணுவ ரீதியான மோதலை நடத்தியதாக ரஷ்யா தெரிவித்து வரும் நிலையில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் கடுமையான தாக்குதலை வான் வழியாக நடத்திய உள்ளதாகவும் அதிபர் Volodymyr Zelenskyy குற்றம்சாட்டி உள்ளார்.

அமைதியான சூழலை கெடுத்து மக்களை கொன்று குவித்து வரும் ரஷ்யாவின் நடவடிக்கை தவறான அணுகுமுறை என்றும் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். பல்வேறு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அதிபர் விளாதிமிர் புதின் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் Volodymyr Zelenskyy குற்றம்சாட்டினார்.

Russia's attack on Ukraine echoes. Ukrainian president says 137 soldiers, civilians killed as thousands flee...உக்ரைன் தலைநகர் கிவிவ்-ல் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் தாக்குதல் காரணமாக நிலைகுலைந்துள்ள நகரில் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் உணவு வாங்குவதற்காகவும், அதற்கான பணத்தை எடுப்பதற்காகவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் அங்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

3 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள அந்த பகுதியில் பாதுகாப்பை உறுதி படுத்துவது மிகப் பெரும் சவாலாக மாறியுள்ளதாக முன்னாள் ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர்.

Link Source: https://ab.co/36vbmYH