Breaking News

அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளது, போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையில் நடைபெற்று வரும் போர் 5 ஆவது நாளை எட்டியுள்ளது. முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று புதின் உத்தரவிட்டுள்ளது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Russian President Vladimir Putin has ordered the keeping of nuclear weapons at the ready, further escalating tensions over the war..புதின் உத்தரவை தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் படைத்த அணு ஆயுத ஏவுகணைகளின் வீடியோக்களை ரஷ்ய பாதுகாப்பு துறை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், ராணுவ அணிவகுப்பின் போது மட்டுமே காட்சிபடுத்தப்படும் அதிநவீன அணு ஆயுதங்கள், தற்போது தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் ரஷ்ய கொடி பொறுத்திய வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
புதினின் இந்த உத்தரவு, பனி போர் காலத்தை விட நிலைமை மோசமடைந்து வருவதை உணர்த்துவதாக, அமெரிக்காவின் முன்னாள் ராணுவ ஆலோசகர் மைக்கேல் கிம்மேஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Russian President Vladimir Putin has ordered the keeping of nuclear weapons at the ready, further escalating tensions over the war, ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவு, போர் தான் எதிர்பார்க்கும் படி நடைபெறவில்லை என்றால், எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டேன் என்பதை வெளிப்படுத்தவே இது போன்ற அச்சுறுத்தலை விடுப்பதாக ஆலோசகர்கள் கருதுகின்றனர். ரஷ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே ஒரு நம்பக தன்மையற்ற சூழல் மேலோங்கியிருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்க-ரஷ்யா நாடுகளிடையே தொடர்பு வலுபெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் கிம்மேஜ் தெரிவித்துள்ளர்.

ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை ஒரு மோசமான முடிவு என்றும், தற்கொலை முடிவுக்கு இணையானது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.

Link Source: https://ab.co/3K5yQSH