Breaking News

உக்ரைன் – போலந்து எல்லையில் ரஷ்ய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் : 35 பேர் பலி – ஏராளமானோர் படுகாயம்

Russian military missile strike on Ukraine-Poland border kills at least 35

உக்ரைனில் 3 வது வாரமாக ரஷ்யா நடத்தி வரும் போரில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் லட்சக்கணக்காக மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் மனிதாபிமான வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற பல்வேறு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ரஷ்யா குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் அதனை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது.

அந்த வகையில், உக்ரைன் போலந்து எல்லையில் Novoyavorivsk நகரில் உள்ள ராணுவ செயல்பாட்டு மையத்தின் அருகில் நடைபெற்ற தாக்குதலில் 35 பேர் உயிரிழந்த நிலையில் 134 பேர் படுகாயமடைந்துள்ளனர். மைகோலைவ் நகரை குறிவைத்தும் ராணுவம் ஏவுகணைத் தாக்குலை நடத்தி வருகிறது.

போலந்து எல்லையில் அமைந்துள்ள உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் நகருக்கு வெளியே உள்ள ராணுவ தளத்தைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். ரஷ்ய ராணுவம் மொத்தம் 8 ஏவுகணைகளை அனுப்பி உள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையை ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் Konashenkov உறுதி செய்துள்ளார்.

Russian military missile strike on Ukraine-Poland border kills at least 35.குறிப்பிட்ட ராணுவ தளங்களில் வெளிநாட்டினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும், அவர்கள் கூலிப்படைகளாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் Konashenkov கூறியுள்ளார். எனவே குறிப்பிட்ட மையங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மிக மோசமான ஏவுகணைத் தாக்குதலை குறிப்பிட்ட மையங்களின் மீது ரஷ்யா நடத்தியதாவும், 30 ஏவுகணைளில் சிலவற்றை பதில் தாக்குலில் தாக்கி அழித்தாகவும் உக்ரைன் அந்த பிராந்தியத்தின் கவர்னர் Maksym Kozytskyy கூறியுள்ளார். ரஷ்யா குற்றம்சாட்டும் வகையில் அங்கு பணியாளர்கள் யாரும் அங்கு இல்லை என்றும், இது மிகவும் மோசமான நடவடிக்கை என்றும் Maksym Kozytskyy தெரிவித்துள்ளார்.

நேட்டோ உறுப்பினரான போலந்துக்கு மிக அருகில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து இதுவரை எந்த வித கருத்தையும் ரஷ்ய வெளியுறவுத்துறை கருத்து தெரிவிக்கவில்லை.

லிவிவ், மரியுபோல், உள்ளிட்ட பகுதிகளில் மனிதாபிமான வழித்தடங்களில் மக்கள் வெளியேறும் நேரங்களில் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இதனால் அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாகவும் உக்ரைன் வேதனை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3CD3gJu