கிழக்கு நகரமான கார்கிவ் மற்றும் வடக்கு நகரமான செர்னிஹில் பகுதி, கீவ்வை சுற்றியுள்ள வடக்குப் பகுதியில் ரஷ்ய படைகள் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். நாசி படைகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள மையத்தின் அருகில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது கண்மூடித்தனமான தாக்குதலை அரங்கேற்றிய நிலையில் அந்த கோபுரம் முழுவதுமாக தகர்க்கப்பட்டது.
இதனை அடுத்து உக்ரைனில் தொலைக்காட்சி சேவைகள் முழுவதுமாக முடங்கியுள்ளன இது மனிதாபிமானமற்ற கொடூரமான தாக்குதல் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி கோபுரம் தகர்க்கப்பட்ட தையும் இதில் 5 பேர் உயிரிழந்த டையும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உறுதிப்படுத்தி உள்ளார்.
உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை முதல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் ராணுவ தளவாடங்கள், அரசு அலுவலகங்களை குறி வைத்து தாக்கி வந்த ரஷ்ய படைகள், தற்போது பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிகிறது. இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உளவுத்துறை அலுவலகங்கள் அருகே இருக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு ரஷ்யா அறிவித்துள்ளது. இருப்பினும் கீவின் நகர்ப்பகுதிக்குள் ரஷ்ய படையை முன்னேறவிடமால் உக்ரைன் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
கீவைக் கைப்பற்றுவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ள ரஷ்யா, அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் படைகளை முகாமிட வைத்துள்ளது. அதுமட்டுமின்றி கீவில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் பீரங்கிகள், ராணுவ வாகனங்களுடன் ரஷ்யா அணிவகுத்து நிற்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கீவிற்கு அடுத்தபடியாக பெரிய நகரமான கார்கிவிலும் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
1941 ஆம் ஆண்டு ஜெர்மனி நாஜிப் படைகள் நடத்திய தாக்குதலில் 33 ஆயிரம் ஜீவ்-கள் கொல்லப்பட்டதன் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவிடத்திற்கு அருகிலேயே தற்போது ரஷ்ய நாஜிப் படைகள் தாக்குதல் நடத்தியிருப்பது காட்டுமிராண்டித்தனமான செயல் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் கடும் கண்டனம் Dmytro Kuleba தெரிவித்துள்ளார்.
Babyn yar பகுதியில் மீண்டும் 80 ஆண்டுகால வரலாற்றை நிறுவுவதற்கு ரஷ்யா முயன்று வருவதாகவும், உலக நாடுகள் அமைதி காத்து வரும் நிலையில் இதுபோன்ற கொடூரமான தாக்குதலை ரஷ்யா அரங்கேற்றி வருவதாகவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
இதனிடையே உக்ரைனை நோக்கி தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படைகள் பெரும்பாலானவை பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், சில படைகள் உணவின்றி தவித்து வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளனர். உளவுத்துறை மூலமாக கிடைக்கப்பெறும் தகவல்கள் ரஷ்யப் படைகளின் பின்னடைவை உறுதிப்படுத்துவதாக ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் அவர்கள் தங்களது தாக்குதலை நடத்தி முன்னேறி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
1.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட உக்ரைனின் முக்கிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யப் படைகள் இடைவிடாது குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதேபோன்று Mariupol துறைமுக பகுதியை முற்றிலும் சீர்குலைக்கும் வகையில் இடைவிடாத வான்வழி தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தி ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு நாடுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக உக்ரைன் சார்பில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர் உடனடியாக ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Link Source: https://ab.co/3prWhh5