Breaking News

ரஷ்யா – உக்ரைன் இடையிலான முதல் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் மீண்டும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டம் : உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்

உக்ரைன் மீதான தனது போரை தொடர்ந்து மேற்கொண்டு வரும் ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்நிலையில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நாள் இடம் ஆகியவற்றை முடிவு செய்ய ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் பெலாரஸ் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷ்யா சம்மதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் பெலாரசில் சந்தித்து முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரஷ்யா உடனடியாக போரை கைவிட வேண்டும் என்றும் உக்ரைனில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக ரஷ்யாவின் துருப்புகள் வெளியேற வேண்டும் என்றும் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாத நிலையில் அது தோல்வியில் முடிந்தது. மீண்டும் அடுத்த சில தினங்களில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

Russia - Ukraine plans to resume next round of talks after failed first round of peace talks. Russia continues to target major Ukrainian cities,போர் நடைபெற்று வரும் ஒவ்வொரு மணி நேரமும் உக்ரைனில் ராணுவ வீரர்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருவதாகவும் அதனை கருத்தில் கொண்டு முடிந்தவரை விரைவில் இந்த பிரச்சனையை தீர்க்க விரும்புவதாகவும் ரஷ்யா சார்பில் பங்கேற்ற உயர்மட்டக் குழுவின் தலைவர் Vladimir Medinsky தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சில ஒப்பந்தங்கள் இரண்டு தரப்புக்கும் சாதகமாக அமையும் வகையில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஐந்தாவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் ஏராளமான இழப்புகளை இரண்டு தரப்பிலும் சந்தித்துள்ளதாகவும், போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் உக்ரைன் தரப்பில் பங்கேற்ற அதிபரின் ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட குழு வலியுறுத்தியது.

இத்தாக்குதலில் உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் Zaporizhzhia அணு சக்தி மையம் தங்களது கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக ரஷ்யா படைகள் கூறியதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது.

Russia - Ukraine plans to resume next round of talks after failed first round of peace talks. Russia continues to target major Ukrainian cities.நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்து வருவதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த நிலையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் Michelle Bachelet கேட்டுக்கொண்டுள்ளார். ரஷ்யாவின் போர் காரணமாக இதுவரை 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் பல்வேறு வழிகளில் உக்ரைனை விட்டு போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி இருப்பதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இதே போன்று ஹங்கேரி, மால்டோவா, ஸ்லோவாகியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏராளமான உக்ரைனியர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அலசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவில் மேலும் பல்வேறு படைகள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தனது தாக்குதலை முடிவுக்கு கொண்டு வராத நிலையிலேயே ரஷ்யா தொடர்ந்து தனது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.