Breaking News

முக்கிய நகரத்தை விட்டு வெளியேறி உக்ரைன்- உள்ளே நுழைந்த ரஷ்யா..!!

லுகான்சிக் மாநிலத்தின் சீவிரோடோனெட்ஸ்க் நகரத்தை விட்டு வெளியேறிவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

Russia leaves major city and enters Ukraine

உக்ரைனின் கிழக்குப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்து போர் புரிந்து வரும் ரஷ்யா.

ரஷ்யாவுடனான போரில் லுகான்சிக் மாநிலத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ள உக்ரைன் ராணுவம், சீவிரோடோனெட்ஸ்க் நகரில் குவிக்கப்பட்டிருந்த படைகளை விலக்கிக் கொண்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனிலுள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றுவதற்கு ரஷ்யா மிகவும் தீவிரமாக போரிட்டு வருகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான லுகான்சிக்கில் ரஷ்யா – உக்ரைன் படைகளுக்கு இடையே சண்டை வலுத்துள்ளது.

Russia leaves major city and enters Ukraine.அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சீவிரோடோனெட்ஸ்க்கை தக்கவைக்க உக்ரைன் உக்கிரமாக போர் புரிந்தது. வாரங்களாக, மாதங்களாக போர் நீடித்தது. தெருக்களில் சண்டையிட்டுக் கொள்வதும் வெடிகுண்டுகளை வீசுவதுமாக போர் தீவிரமாக இருந்தது. ஆனால் தற்போது சீவிரோடோனெட்ஸ்க் நகரிலிருந்து படைகளை விலக்கிவிட்டதாக லுகான்சிக் மாநில ஆளுநர் செர்ஹி ஹைதாய் தெரிவித்துள்ளார். அந்நகரத்தின் எஞ்சியுள்ள மிச்சங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. இனிமேலும் போர் செய்வதில் பயனில்லை என்ற காரணத்தால் சீவிரோடோனெட்ஸ்க் நகரை விட்டு உக்ரைன் படைகள் வெளியேறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

லுகான்சிக் மாநிலத்தில் மற்றொரு முக்கியமான நகரம் லைசிசான்ஸ்க். தற்போது சீவிரோடோனெட்ஸ்க் நகரை ரஷ்யாவின் கைகளுக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது. அது முழுமை அடைந்தால் லைசிசான்ஸ்க் நகரையும் ரஷ்யப் படை கைப்பற்றிவிடக்கூடும். இதையடுத்து ஒட்டுமொத்த கிழக்கு உக்ரைன் பகுதிகளுமே ரஷ்யாவின் கட்டுக்குள் செல்லும் சூழல் உருவாகும் என்று கூறப்படுகிறது.

உக்ரைனின் முக்கிய நகரங்களை அழித்தொழிப்பது ரஷ்யாவின் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. அதிலும் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கு டான்பாஸ் பகுதியை குறிவைத்து ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்து வருகிறது. அதில் தற்போது ரஷ்யா பாதி வெற்றி அடைந்துவிட்டதாகவே நிபுணர்கள் கூறுகின்றனர்.

லுகான்சிக் மாநிலம் ரஷ்யாவின் கட்டுக்குள் செல்லும் பட்சத்தில், அது டாண்ட்ஸ்க் மாநிலத்தையும் கைப்பற்றக்கூடும். அதன்மூலம் டான்பாஸ் நகரமும் ரஷ்யாவின் கட்டுக்குள் சென்றுவிடும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.