Breaking News

UEFA சாம்பியன் லீக் கால்பந்து இறுதிப் போட்டி ரஷ்யாவிலிருந்து பாரிஸீக்கு மாற்றுவதாக அறிவிப்பு : உக்ரைன் மீதான போர் தாக்குதலை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்

Russia announces transfer of UEFA Champions League final to Paris. War on Ukraine relocated

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக பல்வேறு நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சர்வதேச பயணிகள் மற்றும் மாணவர்கள் உக்ரைனிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் ரஷ்யாவில் திட்டமிடப்பட்டிருந்த விளையாட்டுப் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை வைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் திட்டமிடப்பட்டிருந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டி அங்கிருந்து இடமாற்றம் செய்யப்படுவதாகவும், பாரிஸில் நடைபெறும் என்றும் ஐரோப்பிய கால்பந்து கழகமான UEFA அறிவித்துள்ளது.

Russia announces transfer of UEFA Champions League final to Paris. War on Ukraine relocated.உக்ரேனிய, ரஷ்யக் குழுக்கள் பங்கேற்கும் விளையாட்டுகளும், தேசிய குழுக்கள் பங்கேற்கும் விளையாட்டுகளும் நடுநிலையான இடங்களில் உள்ள விளையாட்டரங்கில் இடம்பெறும் என்று UEFA சொன்னது. அடுத்த அறிவிப்பு வரும்வரை அந்த மாற்றம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் கால்பந்து கழகத்திற்கான முழு ஒத்துழைப்பை வழங்கி போட்டி நடத்துவதற்கான அனுமதியை வழங்கியதற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனுக்கு UEFA நன்றி தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அரசின் உதவியோடு இறுதிப்போட்டியை உரிய முறையில் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், உக்ரைனில் சிக்கி உள்ள கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் UEFA செயற்குழு உறுப்பினர் Alexander Dyukov அறிவித்துள்ளார்.

16 ஆண்டுகளுக்கு முன்னதாக 2006ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் –ஐ பார்சிலோனா வென்றது. பின்னர் 68 ஆயிரம் பேர் அமரக்கூடிய செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மைதானத்தில் 2019 மற்றும் 2021 இறுதிப் போட்டி வரை நடத்தப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் உக்ரைன் – ரஷ்யா மோதல் காரணமாக பாரிஸில் நடத்தப்பட உள்ளது.

Link Source: https://ab.co/3M4cfb5