Breaking News

மேற்கு இத்தாலியில் ஏரி அருகே ரோப்கார் அறுந்து விழுந்து விபத்து : 14 பேர் பலி – 3 பேர் படுகாயம்

Rope Car crashes near lake in western Italy, 14 killed, 3 injured

இத்தாலியின் Piedmont மாகாணத்தில் Maggiore ஏரி அருகே உள்ள Mottarone மலையில் தான் ரோப் அறுந்து விழுந்து விபத்து நேர்ந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட இந்த ரோப் கார் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் ரோப் கார் அறுந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Stresa-Mottarone ரோப் கார் நிறுவனம் சுற்றுலா பயணிகளை புகழ்பெற்ற நகரமான Stresa-வில் இருந்து 20 நிமிடத்தில் மலை உச்சிக்கு ரோப் கார் மூலமாக அழைத்துச் செல்லும். இந்நிலையில் ஊரடங்கு காலத்திற்குப் பின்னர் ரோப் கார் சேவை திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை உச்சிக்கு செல்வதற்காக காத்திருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட புரோக்கர் சேவையில் விபத்து ஏற்பட்டு 14 பயணிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 7 பேர் இஸ்ரேலியர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இத்தாலியின் வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

Rope Car crashes near lake in western Italy, 14 killed, 3 injured.நிலப்பகுதியில் இருந்து மலை உச்சி மிகவும் உயரமான உயரமானது என்றும் இதில் அதிக அளவிலான லிப்ட் மூலமாக இழுத்ததே, இந்த மோசமான விபத்துக்குக் காரணம் என Alpine மீட்புக் குழுவைச் சேர்ந்த Walter Milan
கூறியுள்ளார். இன்னும் விபத்துக்கான உரிய காரணம் கண்டறியப்படவில்லை என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ரோப் கார் இயக்கும் தொழில்நுட்பம் பணியாளர்களிடம் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் Walter Milan கூறியுள்ளார்.

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை பிரதமர் Mario Draghi தெரிவித்துக் கொண்டுள்ளார் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறுவர்கள் அவர்களது குடும்பங்கள் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கார்களை இழுத்துச் செல்லும் ரூட் அறுந்த நிலையில் அது 45 மரங்களில் மோதியது மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இதில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை பாதிக்கப்பட்டதாகவும் Stresa மேயர் Marcella Severino கூறியுள்ளார்.

Rope Car crashes near lake in western Italy, 14 killed, 3 injuredவிபத்துக்கான உரிய காரணம் கண்டறியப்பட்டு அது இனி வரும் காலங்களில் நிகழாத வண்ணம் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். ஆயிரத்து 491 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலைக்கு செல்லும் பாதைக்கு இடையே ஏரி அமைந்துள்ளதாகவும், மலையின் மேல் குழந்தைகளுக்கான ஒரு கேளிக்கை பூங்கா இருப்பதாகவும் மேயர் Marcella Severino குறிப்பிட்டுள்ளார். ஊரடங்குக்குப் பின்னர் மிக அதிக அளவிலான பயணிகள் வந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது மிகவும் வருத்தத்திற்கு உரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.