Breaking News

2022 பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் Rodrigo Duterte போட்டி இல்லை : தீவிர அரசியலில் இருந்தே ஓய்வு பெறப்போவதாகவும் அறிவிப்பு

அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் தனது மகள் போட்டியிடப் போவதாகவும், தனது நீண்ட கால ஆசை மகளை அதிபராக வேண்டும் என்பதாகும் என Rodrigo Duterte கூறியுள்ளார்.

Sara Duterte-Carpio தற்போது Davao நகரின் மேயராக உள்ளார் பிலிப்பைன்ஸ் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான Davao மேயராக கடந்த வாரம் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தேசிய அலுவலகத்திற்கு செல்வதற்கான விருப்பம் தனக்கில்லை என்று அவர் கூறியிருந்த நிலையில் அடுத்த அதிபர் தேர்தலில் தனது மகள் போட்டியிடுவார் என்று Sara Duterte-Carpio அறிவித்துள்ளார்.

Rodrigo Duterte will not run in the 2022 Philippine presidential election, announces retirement from radical politicsஅதே நேரத்தில் Rodrigo Duterte வெளியிட்ட அறிவிப்புகள் குறித்த தகவல்களுக்கு எந்தவிதமான பதிலும் அளிக்க விரும்பவில்லை என்று Davao மேயரான Sara -வின் செய்தி தொடர்பாளர் Christina Garcia Frasco தெரிவித்துள்ளார். 76 வயதான Rodrigo Duterte அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியில்லை மற்றும் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வந்துள்ள இந்த அறிவிப்பு, மகளுக்கான அதிபர் போட்டிக்கு வழிவிடும் வகையில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

பிலிப்பைன்சில் Rodrigo Duterte ஆட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள், எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் போதை பொருள் எதிர்ப்பு அடக்குமுறை, கடுமையான பேச்சு மற்றும் மாறாக அரசியல் போக்கு உள்ளிட்டவைகளுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://bit.ly/3BakXyv