Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு : இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 124 பேருக்கு தொற்று உறுதி

Rising virus outbreak in New South Wales. 124 people confirmed infected in a single day

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 124 பேருக்கு தடுப்பதன் மூலம் மிக மோசமான வைரஸ் பாதிப்பு நாளாக மாறியிருப்பதாகவும் இது மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் இருப்பதாகவும் நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் Gladys Berejiklian கூறியுள்ளார்.

Rising virus outbreak in New South Wales, 124 people confirmed infected in a single day124 பேரில் 67 பேர் ஏற்கனவே தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும், 57 பேர் பேருக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் பிரிமியர் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களில் 87 பேர் வைரஸ் தொற்று அறிகுறிகள் உடனேயே பல்வேறு பகுதிகளில் நடமாடி வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அடுத்து வரும் நாட்கள் மிக மோசமானதாக இருக்கும் என்றும், Canterbury-Bankstown ஊரகப் பகுதிகளில் வசிப்போர் சுகாதாரத்துறை மற்றும் முதியோர் பராமரிப்பு பணி யாளர்கள் பணிக்குச் செல்லும்போது 72 மணி நேரத்திற்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறும் தேவையின்றி வெளியில் செல்வது நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் ப்ரீமியர் Gladys Berejiklian
கேட்டுக் கொண்டுள்ளார்.

Rising virus outbreak in New South Wales. 124 people confirmed infected in a single day,தற்போது நாம் இருக்கும் மோசமான காலகட்டத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்றும், 118 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை யில் உள்ளதாகவும் அதில் 28 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் ப்ரீமியர் கூறியுள்ளார். மேலும் 14 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் Gladys Berejiklian குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஊரக பகுதிகளில் பெரும்பாலான மக்களுக்கு வீடுகளிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது மேலும் தொற்று பரவல் இடங்களாக கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு தேவையின்றி செல்ல வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வேண்டும் என்றும் அதிராத நகா் மற்றும் பயிர் தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்தி கொள்வதற்கான வயது தொடர்பான ஆலோசனை விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Link Source: https://ab.co/2W313G4