Breaking News

ஆஸ்திரேலியாவின் Katherine’s பகுதியில் பழங்குடியினர் இடையே அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு : வீடுகளில் அதிகம் பேர் வசிப்பதால் தொடரும் அச்சம்

Rising virus among Indigenous peoples in Australia's Katherine's region. Fears continue as more people live in homes

Katherine பழங்குடியின மக்கள் பெரும்பாலும் அதிக எண்ணிக்கையில் ஒரே வீடுகளில் வசித்து வருவதால் அவர்கள் எளிதில் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக Wurli Wurlinjang பிரிவின் தலைவர் Lisa Mumbin கவலை தெரிவித்துள்ளார்.

Rising virus among Indigenous peoples in Australia's Katherine's region. Fears continue as more people live in homes.Katherine, ராபின்சன் நதி பகுதியில் சமூக பரவல் மூலமாக மேலும் 9 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 11 பேர் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் 2-ஆவது நாளாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. Northern Territory பகுதியில் தற்போது முற்றுப்பெறவில்லை கண்டறியும் பணிகளில் சுகாதாரத் துறை தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட Katherine, ராபின்சன் நதி பகுதியில் ஒரே வீடுகளில் அதிக எண்ணிக்கையிலான பழங்குடியின குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் எளிதில் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rising virus among Indigenous peoples in Australia's Katherine's region. Fears continue as more people live in homes...Katherine நகரத்தின் Wurli Wurlinjang பழங்குடியின மக்களுக்காக உள்ள சுகாதார நிலையம் தொற்றுப் பரவல் மையமாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதனை உடனடியாக மூடி சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கடுமையான வறுமை மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய் தொற்று மிகப் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக இருப்பதாக Wurli Wurlinjang பழங்குடி இனத் தலைவர் Lisa Mumbin தெரிவித்துள்ளார்.

மக்கள் பெருமளவு தங்களுக்கு உள்ளாக பகிர்ந்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில் வீடுகளில் அதிக அளவு நபர்கள் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை அதிகரித்து காணப்படுவதாகவும் Lisa Mumbin கூறியுள்ளார்.

மேலும் பெரும்பாலான பள்ளி வளாகங்களில் உணவகங்கள் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட இடங்களில் மையங்களாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அங்கு சென்று வந்த நபர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3kJHRXx