Breaking News

விக்டோரியாவில் அதிகரிக்கும் தொற்றுப் பரவல் : மேலும் ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து ப்ரீமியர் உத்தரவு

Rising pandemic in Victoria. Premier orders curfew extended for another five days

இன்று பிற்பகல் Maribrynong குடியிருப்பில் இரண்டு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து உடனடியாக நள்ளிரவு முதல் ஊரடங்கு நீட்டிப்பு நடவடிக்கைகள் அவளுக்கு வருவதாக பிரீமியர் Daniel Andrews தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு அறிவிப்பை கனத்த இதயத்துடன் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து அடுத்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஐந்து காரணங்களுக்காக மட்டும் வெளியில் வருவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

Rising pandemic in Victoria. Premier orders curfew extended for another five days.இந்த ஊரடங்கு நீட்டிப்பு நடவடிக்கைகள் ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வந்து விடுமா என்பது தெரியாது என்றும், அதே நேரத்தில் விக்டோரியா மாகாணத்தின் முக்கிய பகுதிகளில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் நிச்சயம் அளிக்கப்படும் என்றும் பிரிமியர் கூறியுள்ளார். தொற்று பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து 5 வது முறையாக ஊரடங்கு அறிவிப்பு வெளியாகிறது.

சமூகப் பரவல் காரணமாக ஏற்படும் தொற்று பாதிப்புகளை உடனடியாகக் கண்டறிந்து அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கும் பணிகளை சுகாதாரத்துறையினர் மிகச் சிறப்பாக கையாண்டு வருவதாக ப்ரீமியர் Daniel Andrews பாராட்டு தெரிவித்துள்ளார். வைரஸ் பரவலின் வேகம் மட்டும் குறைவாக இருந்திருந்தால் அது நம்மை விட்டு விலகி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதியோர் பராமரிப்பு, கல்வி, மருத்துவ தேவை, தடுப்பூசி போடுவதற்காக உள்ளிட்ட ஐந்து அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முடிந்தவரை ஒரு வார காலத்திற்குள் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஊரடங்கு தளர்வு வழங்கப்படும் என்றும் பிரிமியர் Daniel Andrews கூறியுள்ளார். மேலும் இந்த வைரஸ் குறித்து பேசுவதற்கு வேறு எந்த நல்ல விஷயங்களும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற இக்கட்டான நிலைக்கு விக்டோரிய மக்களிடம் தான் மன்னிப்புக் கோருவதாகவும், ஆனால் இதிலிருந்து நாம் விரைவில் மீண்டு விடலாம் என்றும் பிரிமியர் Daniel Andrews நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Rising pandemic in Victoria. Premier orders curfew extended for another five days,அதே நேரத்தில் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் இருந்து வந்த Removalist குழு மூலமாகவே 18 பேருக்கு தொற்றுப் பரவல் உறுதியானதாகவும், அதன் காரணமாகவே தற்போது ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது ஆனால் இந்த விவகாரத்தில் நியூ சவுத் வேல்ஸ் மீது குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பிரிமியர் Daniel Andrews தெரிவித்துள்ளார். தங்களின் பணியை தாங்கள் சிறப்பாக செய்து வருவதாகவும் அதன் அடிப்படையில் மக்களை தொட்டுபர் வலியில் இருந்து காப்பாற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தொற்று பரவல் பாதிப்பு மையங்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது மேலும் தொடர்பில் இருப்பவர்களை கண்காணித்து அதன் அடிப்படையில் ஆயிரத்து 500 பேர் இதுவரை சமூகப் பரவல் தொற்றுத் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களை கண்காணித்து தேவைப்பட்டால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3enFK8B