Breaking News

தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம்- ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை..!!

நடப்பாண்டில் பணவீக்கம் 7 சதவீதத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவில் பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று ஆர்.பி.ஐ ஆளுநர் பிலிப் லோயி கூறியுள்ளார்.

Rising inflation - RBI Governor warns.

ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் இருந்து வந்தாலும், அது எந்த கட்டத்திலும் மந்தநிலையை எட்டவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் பிலிப் லோயி தெரிவித்துள்ளார்.

சிட்னியில் நடந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிலிப் லோயில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது நுகர்வோர் மூலம் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறினார். கடந்த 1990-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இந்த நிலை மீண்டும் ஏற்படுவதாக தெரிவித்தார்.

Rising inflation - RBI Governor warnsமேலும் பேசிய அவர், மின்சாரம் மற்றும் எரிவாயுக்கான விலையேற்றம் பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது. அதை சரிசெய்வதற்கான பணிகளில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வருகிறது. அதற்கு ஆஸ்திரேலியாவின் மின் உற்பத்தி துறைகளும் தங்களுடைய பங்களிப்பை வழங்கி வருகின்றன என்றார். தொடர்ந்து பேசுகையில், பொருளாதாரத்தின் நிலைமை சற்று அச்சமூட்டுவதாக இருந்தாலும், அதில் சில சாதகமான விஷயங்களும் ஏற்பட்டுள்ளன. முன்பை விட வேலைவாய்ப்பு பிரச்னை குறைந்துள்ளது. குடும்பங்களிடையே சேமிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பணவீக்க பிரச்னையை சிறிது சமாளிக்க முடியும் என்று தெரிவித்தார்.

கொரோனா தொற்றுப் பரவலுக்கு பிறகு பல்வேறு நாடுகள் பணவீக்கத்தை சந்தித்து வருவகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது பணவீக்கம் 3.7 சதவீதமாக அதிகரித்து 7 விழுக்காட்டை அடையும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் இது மேலும் 2 முதல் 3 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே பிரச்னை ஆஸ்திரேலியாவிலும் எதிரொலித்து வருகிறது. அதற்கு கொரோனாவுக்கு பிறகு எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளே முக்கிய காரணம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் பிலிப் லோயி கூறினார்.