Breaking News

ஜப்பானில் அதிகரித்துவரும் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு : மருத்துவமனைகளில் குழந்தைகளை தனிமைப்படுத்த சிறப்பு வார்டுகள் அமைப்பு

கொரொனா வைரஸின் தாக்கம் ஜப்பானில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அனைத்து தரப்பு வயதினரும் டெல்டா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

Rising delta virus outbreak in Japan. Special wards system to isolate children in hospitals.15மாத குழந்தை பேபி சாராவுக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் S Kanagawa வில் உள்ள St Marianna மருத்துவமனையில் சிறப்பு தனிமைப்படுத்துதல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தாய் வேறு ஒரு மருத்துவமனையில் வைரஸ் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான தொற்று பாதிப்புக்கு சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது Red zone என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வார்டில் பேபி சாரா உட்பட ஏராளமான சிறுவர்கள் வகை வைரஸ் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Rising delta virus outbreak in Japan. Special wards system to isolate children in hospitals,.ஒவ்வொரு சிறுவர்கள் மற்றும் குழந்தைகளிடமும் தனித்தனியாக செவிலியர்கள் அதிக நேரங்களை செலவிட தேவை இருப்பதாகவும் மருந்துகள் உட்கொள்ளும் போது பெற்றோர்களுடன் வீடியோ கால் மூலமாக குழந்தைகள் பேச வைக்கப்படுவதாகவும் அங்கு பணியாற்றும் செவிலியர் Megumi Harada கூறியுள்ளார். குழந்தைகள் மிகவும் தனிமையாக உணரும் போது தங்களை அனைத்து கொள்வதாகவும் சிறப்பு தனிமைப்படுத்துதல் வார்டில் உள்ள குழந்தைகள் நல மருத்துவர் கூறியுள்ளார்.

Rising delta virus outbreak in Japan. Special wards system to isolate children in hospitals..டோக்கியோவில் குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 20 வயது முதல் 30 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது. அதேநேரம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி 2 டோஸ் முடிவடைந்துள்ளது. பேபி சாரா உள்ளிட்ட ஏராளமான குழந்தைகள் தனிமைப்படுத்துதல் வார்டில் மிகவும் சோகத்துடன் காணப்படுவதாகவும், பெரும்பாலான நேரங்களில் அழுதுகொண்டும், தூக்கம் இன்றி தவித்து வருவதாகவும் குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/2XjvCbb