Breaking News

தெற்கு ஆஸ்ரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு : ஒரே நாளில் 2 ஆயிரத்து 401 பேருக்கு தொற்று – 13 பேர் உயிரிழப்பு

Rising corona outbreak in South Australia. 2,401 people infected in a single day - 13 deaths

தெற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ள தொற்று பாதிப்பு 2 ஆயிரத்து 401 ஆக உள்ளது. மேலும் ஒரே நாளில் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையான 13 ஆக பதிவாகி உள்ளது. தொற்று பாதிப்பு தொடங்கி இதுவே ஒரு நாளின் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கையில் 6 பேர் இணை நோயுடைய முதியவர்கள் என்றும், இந்த எண்ணிக்கையின் வழியாக மக்களை அச்சுறுத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் தெற்கு ஆஸ்திரேலிய ப்ரீமியர் Steven Marshall கூறியுள்ளார்.

Rising corona outbreak in South Australia. 2,401 people infected in a single day - 13 deaths,50 வயதான பெண் ஒருவர், 60 வயதான ஆண் ஒருவர், 70 வயதான பெண், 80 வயதுடைய ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள், 90 வயதில் இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என உயிரிழப்பு பதிவாகி இருப்பதாகவும், இதுவரை 87 உயிரிழப்புகள் பதிவாகி உள்ள நிலையில் அதில் 79 பேர் 2022 ஆண்டில் மட்டும் உயிரிழந்ததாக தெற்கு ஆஸ்திரேலிய சுகதாரத்துறை தெரிவித்துள்ளது. முதியோர் பராமரிப்பு இல்லங்களில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு தாமதமாக வருவதும், தொற்று பாதிப்பின் தீவிரம் மற்றும் இணை நோய் காரணமாக வயதானவர்கள் உயிரிழக்கும் போக்கு அதிகரித்து வருவதாக ப்ரீமியர் Steven Marshall தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 2 ஆயிரத்து 401 பேருக்கு தொற்று பாதித்ததை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்து 574 ஆக அதிகரித்து உள்ளது. தொற்று பாதிப்பை பொறுத்தவரை உச்சத்தில் இருந்து குறைந்து வருதாகவும், தெற்கு ஆஸ்திரேலியாவில் பாதிப்பு எண்ணிக்கை வரும் நாட்களில் குறையும் என்றும் ப்ரீமியர் Steven Marshall நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

288 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 26 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 26 ஆயிரம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 14 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் நெகடிவ் என வந்து அறிகுறிகள் தென்பட்டால் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தொற்று பாதித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அறிகுறிகள் இருந்தால் அவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், தனிமைப்படுத்துதல், முகக்கவசம் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெற்கு ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3KO0vc3