Breaking News

ஆப்கானிஸ்தான் போர் குற்ற நடவடிக்கைகளுக்கு பிறகாக மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் : ஆஸ்திரேலியாவின் அதி உயர்ரக படையான SAS -ஐ மேலும் வலுப்படுத்தத் திட்டம்

ஆஸ்திரேலியாவின் பெர்த் மையமாகக் கொண்டு செயல்படும் அதி உயர் ரக படையான சிறப்பு வான்வழி சேவைப் படையை மேலும் பன்மடங்கு வலுப்படுத்தவும், மூத்த அதிகாரிகளை பணியமர்த்தவும் திட்டமிடப்பட்டு்ள்ளது.

ஆப்கானிஸ்தான் போர்க்குற்ற விசாரணைகளுக்கு பிறகாக 9 மாதங்கள் கழித்து சிறப்பு வான்வழி சேவை படையின் தலைமைப் பொறுப்பு மற்றும் தேவையான உட்கட்டமைப்புகள், பொருத்தமான மேற்பார்வை ஆகியவை தரம் உயர்த்தப்படும் என்று கர்னல் தெரிவித்துள்ளார்.

Restructuring in the aftermath of war crimes in Afghanistan. Plans to further strengthen SAS, Australia's highest-ranking force.ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறைவாசிகள் மற்றும் அந்நாட்டு மக்கள் 39 பேர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக 19 SAS படைவீரர்கள் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். Brereton அறிக்கையின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டதாகவும் தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை அடுத்து தற்போது சிறப்பு அதிரடிப்படை லெப்டினன்ட் கர்னல் தலைமையில் பன்மடங்கு மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படும் என்றும் அடுத்த 10 ஆண்டுகளுக்கான போர் நடவடிக்கைகளுக்கு தயார் படுத்தப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

57 ஆண்டுகள் வரலாற்று சிறப்பு மிக்க படையில் அனைத்து பிரிவுகளின் நம்பகத்தன்மை, படைபலம் அனைத்தும் அதிகரிக்கப்பட்டு Grey Zone எனப்படும் போர் எல்லைகளில் ஆஸ்திரேலியாவின் பலம் உயர்த்தப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.

SAS படைப்பிரிவின் அசாத்திய துணிச்சலான சாதனைகளை கடந்த வாரங்களில் ஆப்கானிஸ்தான் உடனான மீட்புப் பணிகளின் போது பார்க்க முடிந்ததாகவும், இவர்கள் நாட்டின் அசைக்க முடியாத சொத்து என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Restructuring in the aftermath of war crimes in Afghanistan. Plans to further strengthen SAS, Australia's highest-ranking force.,.9/11 தாக்குதலின் 20 ஆண்டுகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா,ஆஸ்திரேலியா, பிரிட்டன் நாடுகளின் படைகள் முழுவதுமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் போரிடுவதற்கு SAS படைப்பிரிவு தயாராகும் படி அந்நாட்டு ராணுவ தலைமை அதிகாரி அறிவுறுத்தி உள்ளார். சிறப்பு படைப்பிரிவுகள் தயாராக இருக்கும் பட்சத்தில் பல்வேறு ரகசிய ஆபரேஷன்கள் நடத்தப்படலாம் என்றும் ராணுவத் தலைமை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3n0IWw9