Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் தளர்வுகளுடன் கூடிய கட்டுபாடுகள் : மே 1 முதல் அமலுக்கு வருகிறது

கடந்த வாரத்தில் பெர்த் – பீல் பிராந்தியத்தில் போடப்பட்ட மூன்று நாள் ஊரடங்கில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து வரும் மே 1 தேதி முதல் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை கொண்டு வருவதாக மேற்கு ஆஸ்திரேலிய ப்ரீமியர் Mark McGowan அறிவித்துள்ளார்.

அதேநேரத்தில் புதிய இடைக்கால கட்டுப்பாடுகள் மே 8ம் நள்ளிரவு 12 மணியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பணியிடங்கள், பொது போக்குவரத்து, உள்ளரங்க பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், வெளியிடங்களில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டால் மாஸ்க் கட்டாயமில்லை என்றும் ப்ரீமியர்
Mark McGowan கூறியுள்ளார்.

தனிநபர்கள் ஏற்பாடு செய்யும் உள்ளரங்க கூட்டங்களில் 30 பேர் வரை பங்கேற்கலாம் என்றும், அங்கு மாஸ்க் அணிவது கட்டாயமல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், விளையாட்டு போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Restrictions on relaxation in Western Australia. Effective May 1AFL டெர்பி போட்டிகள் பெர்த் மைதானத்தில் நடைபெறலாம் என்றும், ஒட்டுமொத்த இருக்கையில் 75% பேர் வரை அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. உள்ளரங்கில் நடைபெறும் திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் எந்த விலக்கும் இன்றி 200 பேர் வரை பங்கேற்கலாம் என்று குறிப்பிடப்பட்டு்ள்ளது. பொது வெளியில் நடத்தப்படும் கூட்டங்களில் கோவிட் 19 நெறிமுறைகள் இன்றி 500 பேர் வரை பங்கேற்கலாம் என்றும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறிவிப்பில் ப்ரீமியர் Mr McGowan கூறியுள்ளார்.

பெருந்தோற்றால் பாதிக்கப்பட்டு்ள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும், அவர்களுக்கான குறிப்பிட்ட இலக்குகளை அனுமதிக்கும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வைப்பதாகவும் Mr McGowan கூறியுள்ளார்.

முதற்கட்டமாக தகுதிவாய்ந்த தொழில்களுக்கு 2000 டாலர் வழங்க அனுமதி உள்ளதாகவும், இது அனைத்து தொழில்களுக்கும் தேவையை பூர்த்தி செய்யாது என்றாலும், பாதிக்கப்பட்ட சிலருக்கு ஆறுதலை அளிக்கும் என்றும் ப்ரீமியர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் மேற்கு ஆஸ்திரேலியாவில் முழு ஊரடங்கை அமல்படுத்தாமல் தவிர்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பல்கலைகழங்களில் தனி நபர் நேரடி பயிற்சி, உயர்நிலை பள்ளிகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி ஆகியவை வழங்கப்பட்டு்ள்ளன. மாணவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளொன்றுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

உடற்பயிற்சி மற்றும் நடனக் கூடங்கள் திறக்கப்படுகிறது. அதே நேரம் இரண்டு மீட்டர் இடைவெளியில் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும்.

தொற்றாளர்களின் தொடர்பில் இருந்தவர்களின் பரிசோதனை முடிவுகள் பெரும்பாலும் நெகடிவ்வாக வந்திருப்பதாகவும், இதுவரை புதிய தொற்று மேற்கு ஆஸ்திரேலியாவில் பதிவாகவில்லை என்றும் ப்ரீமியர் Mr McGowan தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3aQOzpy