Breaking News

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு கட்டுப்பாடுகள் : அடுத்த ஆண்டு மெல்போர்னில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்போர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்

Restrictions on Players at the Australian Open Tennis Tournament. Attendance at Melbourne next year is required to be vaccinated

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக கட்டுப்பாடுகள் குறித்து பல்வேறு யூகங்கள் வெளிவந்திருந்த நிலையில் அதற்கு முடிவு கட்டும் விதமாக போட்டிகளில் பங்கேற்கும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின் இயக்குனர் Craig Tiley தெரிவித்துள்ளார்.

உலகின் நம்பர் 1 வீரரான Novak Djokovic தான் தடுப்பூசி செலுத்தி இருக்கும் விவரம் குறித்து தெரிவிக்காத நிலையில் அது தொடர்பான பல்வேறு கருத்துக்கள் வெளிவந்திருந்தன. அதிகாரப்பூர்வமாக தடுப்பூசி செலுத்தினாரா இல்லையா என்பது தொடர்பான விவரங்களை Novak Djokovic தெரிவிக்க மறுத்து வந்தார்.

Restrictions on Players at the Australian Open Tennis Tournament. Attendance at Melbourne next year is required to be vaccinated.இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இயக்குனர் Craig Tiley, தான் Novak Djokovic இடம் பேசியதாகவும் போட்டிகளில் பங்கேற்க கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்கவேண்டும் என்பதை அவர் அறிந்து இருப்பதாகவும், இதனால் போட்டிகளில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் Craig Tiley கூறியுள்ளார்.

இதேபோன்று விக்டோரியா பிரிமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கான பல்வேறு நெறிமுறைகளை வகுத்து இருப்பதாகவும் Craig Tiley தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே ப்ரீமியர் வெளியிட்ட அறிவிப்பில் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க விக்டோரியா வரும் நபர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி இருந்ததாகவும்
Craig Tiley குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை விளையாட்டு வீரர்களுக்கும் அது சார்ந்த குழுக்களுக்கும் தெரிவித்திருப்பதாகவும் எனவே அதனை முறையாக பின்பற்றும் பட்சத்தில் ஒவ்வொரு வீரர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கான இயக்குனர் Craig Tiley தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி தொடர்பான கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் கடந்த வாரம் வரை டென்னிஸ் வீரர் Novak Djokovic போட்டிகளில் பங்கேற்பாரா இல்லையா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் உறுதி ஆகாமல் இருந்தது.

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான Daniil Medvedev, தான் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக மீட் செய்திருந்தார் ஆனால் அவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான விவரங்கள் எதையும் தெரிவிக்காமல் இருந்தார்.

இதனிடையே போட்டியில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்கிற உத்தரவை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின் இயக்குனர் Craig Tiley உறுதிப்படுத்தியுள்ளார்.

Link Source: https://ab.co/30LKYan