Breaking News

டாஸ்மானியாவின் தென்கிழக்குப் பகுதியில் வீசிய புயல் காரணமாக, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அப்பகுதிவாசிகள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

Residents in southeastern Tasmania have been without electricity for more than a week due to a typhoon

ஆஸ்திரேலியாவில் பல்வேறு இயற்கை சீற்றங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. டாஸ்மானியா மாநிலத்திலுள்ள பியூலா என்கிற பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பலத்த காற்று வீசியது. இதில் மரம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 54 வயதான பெண் உயிரிழிந்தார். அவருடைய 55 கணவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Residents in southeastern Tasmania have been without electricityஇந்த புயலின் பாதிப்பாக, அப்பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்பட்டது. அதனால் அங்குள்ள 20 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்பு பணியிடனர் பியூலா பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் பலரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சாலைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக பணிகளில் மீட்புப் படை துரிதமாக பணியாற்றி வருகிறது. தொடர்ந்து அப்பகுதிகளில் பருவநிலை மாறுபாடு கொண்டு இருப்பதால், மீட்பு பணிகள் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் திட்டமிட்டபடி விரைந்து முடிக்க அவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.