Breaking News

கங்காரூ தீவு காட்டுத்தீயில் அழிந்ததாக கருதப்பட்ட கொலைகார சிலந்தி இனம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கொலைகார சிலந்திகள்( Zephyrarchaea austini),என்று அழைக்கப்படும் பெலிகன் சிலந்திகள் கங்காரூ தீவுப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட மேற்கு ஆற்றுப்பகுதியில் கண்டறியப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத்தீயில் சுமார் 2 லட்சம் ஹெக்டேர் காடுகள் முற்றிலும் எரிந்து கருகியது.

இந்த காட்டுப்பகுதியை வாழ்விடமாக கொண்ட கொலைகார சிலந்தியினம் இந்த தீயில் முற்றிலும் அழிந்ததாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்பட்டது.

இந்நிலையில் இந்த இனத்தை சேர்ந்த குட்டி சிலந்தி மற்றும் ஒரு பெண் சிலந்தியை கண்டறிந்ததாக ஜெசிகா மார்ஷ் தெரிவித்துள்ளார். இவர் தெற்கு ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Researchers have been thrilled to find the deadly spider species extinct in the Kangaroo Island wildfire..இந்த கொலைகார சிலந்தியினம் தங்கள் வாழ்விடத்தில் இருந்து நீண்ட தூரம் செல்ல விரும்பாது என்று தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர் ஜெசிகா, தற்போது புதிய இடத்தில் கண்டறியப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், தீ விபத்துக்கு முன்பே இது வெளியேறிருக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறுகிறார். கடந்த செப்டம்பர் மாதமே இந்த சிலந்திகள் கண்டறியப்பட்டாலும், மரபணு சோதனையில் உறுதி செய்யப்பட்ட பிறகே அறிவிக்கப்படுவதாகவும் ஜெசிகா தெரிவிக்கிறார்.

ஜூராஸிக் காலகட்டத்தை சேர்ந்தாக கருதப்படும் இவ்வகை ஸ்பைடர்கள், மற்ற சிலந்திகளை வேட்டையாடி கொல்வதால் கொலைகார சிலந்திகள் என்று பெயர் வந்ததாக கருதப்படுகிறது.

காட்டுத்தீயால் அழிந்ததாக கருதப்பட்ட உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் எல்லா உயிரினங்களையும் இன்னும் கண்டறிய முடியவில்லை .

Researchers have been thrilled to find the deadly spider species extinct in the Kangaroo Island wildfire...அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள அரிய வகை உயிரினங்களில் மூன்றில் ஒரு சதவீதம் மட்டுமே மனிதர்களால் கண்டறிய பெற்றிருப்பதாகவும் இன்னும் பெரும்பாலான உயிரினங்கள் மனிதனுடைய பார்வையில் தென்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தற்போது மீண்டு வந்திருக்கக்கூடிய இந்த கொலைகார சிலந்திகள் புதிய தகவமைப்பு க்கு ஏற்றவாறு உயிர்வாழும் திறன் பெற்றிருப்பதாகவும் ஆனால் இது கடந்த காலத்தில் இருந்த கொலைகார சிலந்திகளின் குணாதிசயங்களை பெறுமா என்பது போகப்போகத்தான் தெரியும் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

தங்களுடைய வனப்பகுதி முற்றிலுமாக எரிந்து போனாலும் கொலைகார சிலந்திகள் மற்ற இடத்தில் கண்டறியப்பட்டது ஓரளவுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் மீண்டும் காட்டு தீயால் எரிந்து சேதம் அடைந்த பகுதி புத்துயிர் பெறுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்றும் அது வரைக்கும் அவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Link Source: https://ab.co/3qQ5bXu