Breaking News

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள் குயின்ஸ்லாந்த் பகுதிகளில் கண்டறியப்பட்டது : டைனோசரின் மாதிரிகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்தியது குயின்ஸ்லாந்து அருங்காட்சியகம்

தென்மேற்கு குயின்ஸ்லாந்தின் அவுட்பேக் பகுதியான Eromanga -வில் நடத்திய ஆய்வில் டைனோசரின் எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டன். அங்கு நிலம் ஒன்றை வாங்கிய Robyn Mackenzie, Stuart ஆகியோர் கால்நடைகளை திரட்டி வந்தனர். அவர்களுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு அங்கு கிடைத்த சில எலும்புக் கூடுகளை Eromanga அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தனர். அப்பகுதி சுட்ட சிவப்பு மண் பகுதியாகும்.

Remains of Australia's largest dinosaur found in Queensland, dinosaur specimens confirmed and confirmed by the Queensland Museum,தற்போது 15 ஆண்டுகள் கழித்து இது தொடர்பான தீவிர ஆராய்ச்சி மற்றும் அகழாய்வுப் பணிகளின் முடிவாக அது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தாவர உண்ணி டைனோசரின் எலும்புக்கூடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிடைத்திருக்கும் மிகப்பெரிய எலும்பு மாதிரிகளின் அடிப்படையில் டைனோசரின் அளவு ஐந்தில் இருந்து ஆறரை மீட்டர் உயரமும், 25 முதல் 30 மீட்டர் நீளமும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது உலகிலேயே முதல் 15 பெரிய டைனோசர்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும் என்றும் அருங்காட்சியக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த எலும்புகள் சுமார் 95 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்தது. இது குறித்து, Eromanga இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் இயக்குநரும், பழங்கால ஆழாய்ச்சியாளருமான ராபின் மெக்கன்சி, ஆஸ்திரேலியா, கோண்ட்வானா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து மிக நீண்ட காலமாக பிரிந்திருப்பதால், நாட்டில் காணப்படும் டைனோசர்கள் தொடர்பான எச்சங்கள் பெரும்பாலானவை அறிவியலுக்கு புதியது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Remains of Australia's largest dinosaur found in Queensland, dinosaur specimens confirmed and confirmed by the Queensland Museum.தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குழு ஆஸ்திரேலியவின் அவுட்பேக் பகுதியில் புதைக்கப்பட்ட சில எலும்புகளை கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு புதிய தாவர வகை டைனோசராக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகித்துள்ளனர். அவுட் பேக் என்பது ஆஸ்திரேலியாவின் உள்துறை மற்றும் தொலைதூர கடற்கரைகளை உள்ளடக்கிய பரந்த, மக்கள்தொகை இல்லாத மற்றும் முக்கியமாக வறண்ட பகுதிகளுக்கான பேச்சுவழக்கு பெயர் ஆகும். ஆய்வாளர்கள் மே 25ம் தேதி அன்று தென்மேற்கு குயின்ஸ்லாந்தின் ஈரோமாங்காவின் சுட்ட சிவப்பு களிமண்ணிலிருந்தும், ஆஸ்திரேலியாவின் கடலில் இருந்து மிக தொலைவில் உள்ள நகரத்திலிருந்து கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இனம் புதிய வகையாக இருக்கும் என்று மெக்கன்சி எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். இருப்பினும், இது நிறுவப்படுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும், ஏனெனில் எலும்புகள் அருங்காட்சியகத்தில் பரிசோதிக்கப்பட வேண்டும். மேலும் அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

Remains of Australia's largest dinosaur found in Queensland, dinosaur specimens confirmed and confirmed by the Queensland Museumஇதுவரை, கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் டைனோசரின் முதுகெலும்புகள் மற்றும் முதுகெலும்பின் எலும்பு கூறுகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், எலும்புக்கூட்டின் கூடுதல் பிரிவுகளைக் கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஏனெனில் இப்போது கிடைத்த எலும்புகள் 3.3 அடி ஆழத்தில் கிடைத்தவை. நீண்ட கால ஆய்வில் கண்டறியப்பட்ட இந்த அகழாய்வு தொடர்பான முடிவுகள் உலக அரங்கில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Link Source: https://ab.co/2TRZiKT