Breaking News

இந்தியாவில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் : கடல் கடந்தும் சிகிச்சையளிக்கும் ஆஸ்திரேலிய மருத்துவர்

Relatives of corona infected in India, Australian doctor treating overseas

இந்தியாவில் கோரோனா இரண்டாம் அலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கட்டுக்கடங்காத நிலையில் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்களது பாதிக்கப்பட்ட உறவிறர்களுக்காக படுக்கை, ஆக்சிஜன் உள்ளிட்ட தேவைகளை இந்தியாவில் பரபரப்பாக தேடி அலைகிறார்கள்.

பாதி உலகை கடந்து வாழும் தனது இந்திய சொந்தங்கள் பாதிக்கப்படுள்ளதை அறிந்து மன உளைச்சலில் இருந்த மருத்துவர் யது சிங் சிட்னியில் இருந்து உயிர்காக்கும் மருத்துவ ஆலோசனைகளை ஆன்லைன் வழியாகவும், தொலைபேசி வீடியோ கால் வழியாகவும் வழங்கி வருகிறார்.

Dr Yadu Singhஅதிகாலை 4 மணியளவில் அவரது தங்கை கணவர், இருதயவியல் மருத்துவர் சோர்ந்த கண்களோடு படுக்கையில் இருப்பது கண்டறியப்படுகிறது. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு 8 மணி நேர பயணத்திற்கு பின் அவர் மருத்துவமனையை வந்தடைந்து இருக்கிறார். அவர் உயிர் பிழைக்க ஆக்சிஜன் செலுத்தப்பட வேண்டிய நிலை இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏராளமான இந்தியர்களும், புலம்பெயர்ந்த மக்களும் நாள்தோறும் இது மாதிரியான கொடூர நிலையை சந்தித்து கொண்டிருப்பதாக டாக்டர். யது சிங் கூறியுள்ளார். நாளொன்றுக்கு சராசரியாக 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், உச்சபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்தனர்.

அதே நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விட 5 லிருந்து 10 மடங்கு அதிகமாக பாதிப்பு இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மருத்துவமனைகள், எரியூட்டும் தகன மேடைகள் நிரம்பி வழிகின்றன. பெரிய நகரங்களிலேயே கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கைகள் இல்லாத நிலை நிலவுகிறது. கடந்து 4-5 நாட்களாகவே கடுமையான சவாலை இந்தியா சந்தித்து வருவதாக சிட்னி மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Relatives of corona infected in India Australian doctor treating overseasஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய மருத்துவ அமைப்புகளும் ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்ப ஏற்பாடு செய்து வருவதாக டாக்டர். யது சிங் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவத்துறை நண்பர்கள், உறவினர்கள் அவர்களின் நண்பர்கள் என ஏராளமானோருக்கு ஆன்லைன் வாயிலாக மருத்துவ உதவிகளை செய்திருக்கிறோம் என்றும், வாட்ஸ்அப் வழியாக சிடி ஸ்கேன் முடிவை பார்த்து அவருக்கு மருத்துவம் செய்து பிழைத்திருக்கிறார் என்றும், வாட்ஸ்அப்புக்கு நன்றி என்றும் டாக்டர். யது சிங் கூறியுள்ளார்.

கடுமையான மருந்து பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இதனை உடனடியாக சரி செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 18 வயது முதல் 45 வயதினருக்கான தடுப்பூசி திட்டம் இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏராளமானோர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாத காரணத்தால் திட்டமிட்டபடி தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆர்டர் செய்துள்ள மருந்துகளை இன்னும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பல்வேறு நாடுகளும் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு சிறப்பு விமானங்கள் மூலமாக அனுப்பி வருகின்றன.

Link Source: https://bit.ly/3gXjvs4