Breaking News

தமிழகத்தில் இரண்டாம் அலையின்போது தொற்றுப் பரவல் அதிகம் இருந்த இடங்களில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று : இரண்டு நாட்களாக கணிசமாக அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு

Recurrent re-infection in areas where the prevalence of the disease was high during the second wave in Tamil Nadu. Significant increase in viral exposure in two days

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஒருநாள் பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் ஆயிரத்து 756 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், 2 ஆயிரத்து 364 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரேநாளில் 29 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 995 ஆக உயர்ந்துள்ளது. 21ஆயிரத்து 526 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இரண்டாவது அறையில் மிக அதிகமாக தோற்றுவித்த நகரங்களான சென்னை கோவை ஈரோடு ஆகிய இடங்களில் கடந்த இரண்டு நாட்களில் வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னையில் 122-வது இருந்த ஒருநாள் பாதிப்பு 164 ஆக உயர்ந்துள்ளது. 164 இருந்த பாதிப்பு 179 ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று கோவையில் 127 இருந்த பாதிப்பு 140 ஆக உயர்ந்துள்ளது.

corona in tamilnaduஊரடங்கில் முழுமையாக தளர்வுகள் அளிக்கப்பட்டு இரண்டு வாரங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டாவது அறையில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய நகரங்களிலேயே தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததை காட்டுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே தமிழகத்தில் மூன்றாவது அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 39412 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25025 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7848​​​​​​​ ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3j671xE