தலைநகர் காபூலை முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தாலிபான்கள் அங்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புதிய அரசை அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தாலிபான்கள் பிரதமராக முல்லா முகமது அசன் அகுந்த்-ஐ தேர்வு செய்துள்ளனர். மேலும் இரண்டு துணை பிரதமர்கள், பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்களையும் நியமனம் செய்துள்ளனர்.
இதனிடையே, தனது முழு ஆதரவு தாலிபான்களுக்கு உண்டு என்றும், அமையும் புதிய அரசுக்கு அனைத்து வகையிலும் உதவி புரிவோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ளஅந்நாட்டின் உள்துறை அமைச்சர் அதற்கேற்ற வகையில் தாலிபான்களும் விசுவாசத்தோடு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தாலிபான்களின் கடுமையான கட்டுப்பாடுகளை கண்டித்தும், பாகிஸ்தான் ஆதரவை எதிர்த்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். புதிய அரசின் கட்டுப்பாடுகள் முந்தைய 1996 – 2001 வரையிலான தாலிபான் அரசின் கொடூரமான நடவடிக்கைகளை போலவே இருக்கும் வகையில் தற்போது தாலிபான்கள் திட்டங்களை தீட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை கண்டித்தும் பேரணி நடைபெற்றது.
காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அலுவலகத்தை முற்றுகையிடும் வகையில் பேரணியாக சென்ற பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரை கலைக்கும் வகையில் தாலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஆப்கன் பெண்கள் தங்கள் நாடு முழு சுதந்திரத்துடன் இருக்க வேண்டும் என்றும், மறுகட்டமைப்பு செய்வதற்கான அனைத்து தங்கள் தீவிரமாக ஈடுபட உள்ளதாகவும் பேரணியில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் தங்கள் அமைதியான இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்றும் எத்தனை நாட்கள் இதேபோன்றதொரு கட்டுப்பாடுகளுடன் வாழ முடியும் என்றும் பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் Faiz Hameed ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார் தாலிபான்கள் அமைத்திருக்கும் புதிய அரசுக்கு தங்களது முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், தாலிபான்கள் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளிலும் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
Link Source: https://bit.ly/3l6s1p8