Breaking News

பிரான்சில் இருந்து இந்தியா வந்தடையும் ரஃபேல் போர் விமானங்கள் !

நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு, பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2022ம் ஆண்டுக்குள் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டு வர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Rafale warplanes arriving in India from Franceஇதில் 30 போர் விமானங்களும், 6 பயிற்சி விமானங்களும் அடங்கும். இந்நிலையில் 10 விமானங்கள் தயாரானது. இதில் ஐந்து விமானங்கள் கடந்த ஆண்டு ஜூலை 29ம் தேதி இந்தியா வந்தது. இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டதோடு, லடாக் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளின் பாதுகாப்பிற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே இந்திய விமானப்படைக்கு வலுசேர்க்கும் விதமாக மேலும் 3 விமானங்கள் நவம்பர் மாதம் வந்து சேர்ந்தது. இந்நிலையில் மீதமுள்ள ரபேல் விமானங்கள் நான்காவது கட்டமாக இன்று இரவு இந்தியாவை வந்தடைகிறது. இந்த ரபேல் ஜெட் விமானங்கள் பிரான்சிலிருந்து புறப்பட்டு எங்கேயும் நிற்காமல் இன்று இரவு 7 மணிக்கு குஜராத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சவூதி அரேபியாவில் வான்வெளிப்பகுதியில் வரும்போது, வான்வெளியிலேயே எரிபொருள் நிரப்பப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.